அமேசான்: சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.
அமேசான் வலைதளத்தில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த வரிசையில் சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனும் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு நல்ல
வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.

அதன்படி 16ஜிபி மெமரி கொண்ட சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.5,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.5,400-விலையில் கிடைக்கிறது.
மேலும் 32ஜிபி மெமரி கொண்ட சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.6,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,300-விலையில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
அதன்பின்பு 1440×720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:
இக்கருவி மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது. பின்பு கருப்பு, நீலம், தங்கம், ரோஸ் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

கேமரா:
சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி கூட இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
4ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு 3000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications