அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை.! ரூ.15,000-க்குள் வாங்கச் சிறந்த ஸ்மார்போன்கள்.!

|

மிகவும் எதிர்பார்த்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2020 அக்டோபர் 17-ம் தேதி (நாளை) தொடங்கும். இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் பிரைம் பயனர்கள் இன்றே சிறப்பு சலுகையில் ஸ்மார்ட்போன் உட்பட பல்வேறு சாதனங்களை வாங்க முடியும்.

பட்டியலைப் பார்ப்போம்

அமேசான் நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு சலுகையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை வாங்கினால் 10 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு சலுகையில் ரூ.15,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்01 கோர்

சாம்சங் கேலக்ஸி எம்01 கோர்

1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்01 கோர் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.5,499-ஆக இருந்தது. தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.4,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்01 கோர் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.6,499-ஆக இருந்தது. தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.5,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 5.3-இன்ச் டிஸ்பிளே, 3000எம்ஏஎச் பேட்டரி, குவாட்-கோர் மீடியாடெக் 6739 சிப்செட், 8எம்பி ரியர் கேமரா என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ரெட்மி 8ஏ டூயல்

ரெட்மி 8ஏ டூயல்

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,499-ஆக இருந்தது. தற்சமயம் விலை குறைக்கப்பட்டு ரூ.7,299-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 6.22-இன்ச் டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி, 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டு:செயலிழக்கும் போது வெடித்து சிதறிய வீடியோ!

 சாம்சங் கேலக்ஸி எம்01எஸ்

சாம்சங் கேலக்ஸி எம்01எஸ்

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9999-ஆக இருந்தது. தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.2-இன்ச் டிஸ்பிளே, 4000எம்ஏஎச் பேட்டரி, 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆகடோ-கோர் சிப்செட் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 9 ப்ரோ

ரெட்மி நோட் 9 ப்ரோ

அமேசான் நிறுவனம் வழங்கும் இந்த சிறப்பு சலுகையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.67-இன்ச் டிஸ்பிளே, 5020எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ Y30

விவோ Y30

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y30 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,990-ஆக இருந்தது. தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 6.47-இன்ச் டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி, 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 8

ரெட்மி நோட் 8

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.12,499-ஆக உள்ளது. ஆனால் அமேசான் நிறுவனம் வழங்கும் சிறப்பு சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.11,499-விலையில் வாங்க முடியும். மேலும் 6.39-இன்ச் டிஸ்பிளே, ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட், 4000எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி ரியர் கேமரா, 13எம்பி செல்பீ கேமரா என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival sale: Best Smartphones under Rs 15,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X