Amazon சிறப்பு விற்பனை: 40% தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிறந்த 5G போன்கள்.!

|

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் ( Amazon Great Indian Festival sale) நான்காவது நாளான இன்று பல்வேறு சாதனங்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கின்றன. குறிப்பாக ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 5ஜி போன்

சரி இப்போது விஷயத்துக்கு, அதாவது அமேசான் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் 5ஜி போன்களுக்கு நம்ப முடியாத விலைகுறைப்புஅறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது விலைகுறைப்பு பெற்ற சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 40 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.24,990-என்று கூறப்படுகிறது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளவிலைகுறைப்பின் மூலம் இந்த கேலக்ஸி எம்33 5ஜி போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி அம்சங்கள்

கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 6000 எம்ஏச் பேட்டரி, ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1280 பிராசஸர், பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த போன் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் போன்.

ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ

ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இதன் அசல் விலை ரூ.24,999-என்று கூறப்படுகிறது.ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளவிலைகுறைப்பின் மூலம் இந்த ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ மாடலைரூ.16,460-விலையில் வாங்க முடியும்.

அடேங்கப்பா இவ்வளவு கம்மி விலையா? Motorola அறிமுகம் செய்த 4கே ஸ்மார்ட் டிவிகள்.!அடேங்கப்பா இவ்வளவு கம்மி விலையா? Motorola அறிமுகம் செய்த 4கே ஸ்மார்ட் டிவிகள்.!

ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ அம்சங்கள்

ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ அம்சங்கள்

ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

மேலும் 6.56-இன்ச் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி,33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஆக்டோ-கோர் ஹீலியோ ஜி35 சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ74 5ஜி

ஒப்போ ஏ74 5ஜி

அமேசானில் முன்பு ரூ.20,000-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ.14,990-க்கு கிடைக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி, colourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி.

48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோசென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ74 5ஜி.

 ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தற்போது அமேசான் தளத்தில் 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.20,999-என்று கூறப்படுகிறது. ஆனால் அமேசான் அறிவித்துள்ள சலுகையின் மூலம்இந்த ரெட்மி போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும்.

6.6-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி

அமேசானில் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 31 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனை ரூ.17,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே, ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 920 5ஜி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன்.

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival sale: Best 5G phones available at 40% off: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X