தொடங்கியது அமேசான் கிரேட் இந்தியன் சேல் : ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு.!

By Prakash
|

தீபாவளிக்கு முன்னதாக, அமேசான் கிரேட் இந்தியன் சேல் திருவிழா விற்பனை இன்று தொடங்கியது, மேலும் ஐபோன் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு ஆஃபரை அறிவித்தது அமேசான் நிறுவனம். எனவே அதிக மக்கள் இந்த விலை குறைப்பு ஆஃபரை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடங்கியது அமேசான் கிரேட் இந்தியன் சேல்.!

இந்த அமேசான் கிரேட் இந்தியன் சேல் பொறுத்தவரை ஸ்மார்ட்போன்கள், டேப்லட்கள், ஹெட்ஃபோன்கள், டிவி போன்ற பல்வேறு பொருட்களுக்கு விலை குறைப்பு ஆஃபரை அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம்.

அமேசான் கிரேட் இந்தியன் சேல் பொருட்களை வாங்கும் சிட்டிபேங்க் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு 10சதவிகிதம் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 4:

சியோமி ரெட்மி 4:

அமேசான் கிரேட் இந்தியன் சேல், சியோமி ரெட்மி 4 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1500 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது, இப்போதுரூ.9,499-க்கு இந்த சியோமி ரெட்மி 4 ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

 ஹானர் 8 ப்ரோ:

ஹானர் 8 ப்ரோ:

ஹானர் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.29,999ஆக இருந்தது, இப்போது விலை குறைக்கப்பட்டு ரூ.26,999-க்கு விற்பனை
செய்யப்படுகிறது. மேலும் இதனுடன் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம்:

சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம்:

அமேசான் கிரேட் இந்தியன் சேல் அதிரடி விலை குறைப்பில் சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம் ஸ்மார்ட்போனை ரூ.10,590-க்கு வாங்க முடியும். அதன்பின் இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,900ஆக இருந்தது.

ஆப்பிள் ஐபோன் 8:

ஆப்பிள் ஐபோன் 8:

ஆப்பிள் ஐபோன் 8 பொதுவாக 64ஜிபி மெமரி மற்றும் 4.7-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதன்பின் இந்த ஐபோன் 8 மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.61,989-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 12எம்பி ரியர் கேமரா கொண்டுள்ளது இந்த
ஐபோன் மாடல்.

பிபிஎல் 55-இன்ச் எச் எல்இடி டிவி:

பிபிஎல் 55-இன்ச் எச் எல்இடி டிவி:

அமேசான் கிரேட் இந்தியன் சேல் அதிரடி விலை குறைப்பில் பிபிஎல் 55-இன்ச் எச் எல்இடி டிவி மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.45,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

லெனோவா யோகா டேப் 3:

லெனோவா யோகா டேப் 3:

லெனோவா அறிமுகப்படுத்திய யோகா டேப் 3 மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின்
இதன் முந்தைய விலை ரூ.16,000எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ஹெய்செர் எச்டி598 ஹெட்ஃபோன்:

சென்ஹெய்செர் எச்டி598 ஹெட்ஃபோன்:

சென்ஹெய்செர் எச்டி598 ஹெட்ஃபோன் மாடலுக்கு தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival sale Apple iPhone 8 to Redmi 4 here are top tech deals ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X