போட்றா.. ஆளுக்கு 1 ஆர்டர் போட்றா.. 5 லேட்டஸ்ட் ONEPLUS போன்கள் மீது அடேங்கப்பா ஆஃபர்.. Amazon SALEல் அதிரடி!
ஒன்பிளஸ் 11 5ஜி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி உட்பட ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் ஏதேனும் ஒன்றின் மீது உங்களுக்கு ஒரு கண் இருந்தால்.. அதை சொந்தமாக்கி கொள்ள இதை விட அருமையான வாய்ப்பு இனி கிடைக்காது!
ப்ரைம் மெம்பர்களுக்கான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 விற்பனையானது, அக்.7 ஆம் தேதியும், அனைவருக்குமான பொது விற்பனை அக்.8 ஆம் தேதியும் தொடங்கவுள்ள நிலையில்.. என்னென்ன ஒன்பிளஸ் போன்கள் மீது என்னென்ன தள்ளுபடி கிடைக்கும் என்கிற விவரங்களை அமேசான் வெளிப்படுத்தியுள்ளது.

01. ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G): அமேசான் விற்பனையின் போது வங்கி சலுகைகள் மற்றும் ரூ.4000 கூப்பன் தள்ளுபடியின் கீழ், ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 5ஜி-யின் (8ஜிபி ரேம் + 128ஜிபி) அசல் விலை ரூ.56,999 ஆகும்
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 6.7-இன்ச் எல்டிபிஓ 3.0 AMOLED 120Hz டிஸ்பிளே, 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 5000mAh பேட்டரி மற்றும் 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவைகளை கொண்டுள்ளது.
02. ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இது ரூ.34,999க்கு (ரூ.2,000 பேங்க் கார்டு ஆஃபர் மற்றும் ரூ.3,000 கூப்பன் தள்ளுபடிகள் உட்பட) வாங்க கிடைக்கும்.
நினைவூட்டும் வண்ணம், இது கடந்த பிப்ரவரியில் ரூ.39,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகமானது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 5ஜி சிப்செட், 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு AMOLED டிஸ்பிளே, 100W SUPERVOOC S ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.
03. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G): வங்கி சலுகைகள் மற்றும் ரூ.2,000 கூப்பன் தள்ளுபடி உட்பட ஒப்புயல்ஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரவிருக்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 விற்பனையின் போது வெறும் ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும்.
நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி போனின் அசல் வெளியீட்டு விலை ரூ. 26,999 ஆகும். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 782ஜி சிப்செட், 80W SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.
04. ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G): அமேசான் விற்பனையின் போது இது ரூ.28,999 க்கு (வங்கி மற்றும் கூப்பன் தள்ளுபடிகள் உட்பட) வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம், இது கடந்த ஜூலையில் ரூ33,999 (8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்) அறிமுகமானது.
ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது அலெர்ட் ஸ்லைடர் (Alert Slider), மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட் (MediaTek Dimensity 9000 SoC), 80W SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவு உடன் 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.
05. ஒன்பிளஸ் நோர்ட் சி 3 லைட் (OnePlus Nord CE 3 Lite): அமேசான் விற்பனையின் போது இது ரூ.17,499 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். இந்த விலை தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி ஒப்பந்தங்கள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளை உள்ளடக்கியது. நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஏப்ரல் மாதம் ரூ.19,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 108 மெகாபிக்சல் மெயின் கேமரா உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 67W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








