Home
Mobile

அமேசான்: ரூ.4000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன்.!

வரும் அக்டோபர் 17-ம் தேதி துவங்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கபட்ட சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சாம்சங் கேலக்ஸி எம்51

6ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.28,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் சிறப்பு விற்பனையில் ரூ.4000-விரை விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.30,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில்ரூ.26,999-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி கார்டுகளை பயன்படுத்தி

மேலும் நோ காஸ்ட் இஎம்ஐ வசதி, பழைய மொபைல் போன்களை கொடுத்து எக்ஸ்சேஞ்ச் செய்யும் வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5சதவிகிதம் தள்ளுபடியும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு இந்த சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் அனைத்து சிறப்பம்சங்களையும் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்51

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2340 பிக்சல் தீர்மானம், 60Hz refresh rate, 420 nits பிரைட்நஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே. கண்டிப்பாக இதன் டிஸ்பிளே அனைவருக்கும் பிடிக்கும் என்றே கூறலாம்.

ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் போக்கோ எக்ஸ்2, ரியல்மி எக்ஸ்2 போன்ற ஸ்மார்ட்போன்களிலும் இதே சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். விரைவில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மென்பொருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் கொண்டு வெளிப்புறங்களில் அழகான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேசமயம் இரவு நேரங்களில் கூட மிகத் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் கொண்டு எடுக்க முடியம்.

7000எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 7000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 25வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்,

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival Sale 2020: Samsung Galaxy M51 gets Discounts Up To Rs 4000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X