அமேசான் தீபாவளி ஆபர்: 5G ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான தள்ளுபடி.!

|

அமேசான் தளத்தில் Amazon Great Indian Festival Finale Days sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் நாம் எதிர்பார்த்த 5ஜி போன்களை கம்மி விலையில் வாங்க முடியும்.

சிறப்பு விற்பனை

சிறப்பு விற்பனை

அதேபோல் இந்த சிறப்பு விற்பனை இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும். எனவே இப்போதே ஒரு நல்ல 5ஜி போனை வாங்குவது மிகவும் நல்லது. சரி இப்போது அமேசான் தளத்தில் 5ஜி போன்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போனுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 5எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

தீபாவளி லோன் கொடுக்கும் மொபைல் நிறுவனம்! அதிகபட்சம் எவ்வளவு கிடைக்கும்? பெறுவது எப்படி?தீபாவளி லோன் கொடுக்கும் மொபைல் நிறுவனம்! அதிகபட்சம் எவ்வளவு கிடைக்கும்? பெறுவது எப்படி?

 iQOO Z6 Lite 5G போன்

iQOO Z6 Lite 5G போன்

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Z6 Lite 5G போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.15,999-விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக 6.5-இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த iQOO Z6 Lite 5G போன்.

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.20,999-விலையில் வாங்க முடியும்.

மேலும் 108எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர், 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்.

ரியல்மி  narzo 50 ப்ரோ 5ஜி

ரியல்மி narzo 50 ப்ரோ 5ஜி

முன்பு ரூ.25,999-க்கு விற்பனை செய்யப்பட்ட ரியல்மி யெசணழ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை தற்போது அமேசான் தளத்தில் ரூ.17,998-க்கு வாங்க முடியும்.

மேலும் Mediatek Dimensity 920 5ஜி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பிசெல்பி கேமரா,6.4-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி 5ஜி போன்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி போனுக்கு அமேசான் தளத்தில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.20,999-விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 64எம்பி ரியர் கேமரா,16எம்பி செல்பி கேமரா, 6.59-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி

அமேசான் தளத்தில் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக இந்த போன் 50எம்பி எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட், 6.6-இன்ச் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி நோட் 11 5ஜி ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.16,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த 5ஜி போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

மேலும் 50எம்பி குவாட் ரியர் கேமரா அமைப்பு, 8எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1280 சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival Finale Days sale: Discount on 5G phones: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X