கனவுல கூட நினைக்கல.. முழுசா ரூ.5000 விலை குறைப்பு.. இந்த OnePlus மாடல் மேல இப்படி ஒரு ஆஃபரா.. என்ன மாடல்?
சில மாதங்களுக்கு முன்னர், இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஒன்று, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் (Flipkart Big Billion Days Sale) போது முழுதாக ரூ.5,000 விலைக்குறைப்பை பெறுகிறது!
அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் அசல் விலை என்ன? ஆஃபர் விலை என்ன? இந்த சலுகை பிளிப்கார்ட் விற்பனையில் மட்டுமே கிடைக்குமா? அல்லது அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் டேஸ் (Amazon Great Indian Festival Days) விற்பனையிலும் கிடைக்குமா? இதோ விவரங்கள்:

அதென்ன ஸ்மார்ட்போன்? ரூ.5,000 என்கிற விலை குறைப்பை பெற்றுள்ளது ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் தான். அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் விற்பனையின் போது, ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G) ஸ்மார்ட்போன் ஆனது இதுவரை இல்லாத அளவிற்கு, மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும்.
அசல் விலையும் ஆஃபர் விலையும்? இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.39,999 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.44,999 க்கும் அறிமுகமானது.
சுவாரசியமாக, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ரூ.5000 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும். இபைகள் முறையே ரூ.34,999 க்கும், ரூ.39,999 க்கும் வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி மீது அமேசான் என்னென்ன ஆஃபர்களை அறிவித்துள்ளது? பிளிப்கார்ட்டை முக்கிய போட்டியாளராக கருதும் அமேசான் வலைத்தளமும், பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கும் அதே நாளில், அதாவது அக்.8 ஆம் தேதி முதல் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் டேஸ் விற்பனையை நடத்துகிறது.
அந்த விற்பனையிலும் கூட ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் மீது ரூ.5000 தள்ளுபடி கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆக நீங்கள் பிளிப்கார்ட் வழியாக வாங்கினாலும் சரி, அமேசான் வழியாக வாங்கினாலும் சரி ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி மாடலை வாங்க இதுவே சரியான நேரமாக இருக்கும்!
நீங்கள் பிளிப்கார்ட் பிளஸ் மெம்பராக இருந்தால் உங்களுக்கான பிக் பில்லியன்ஸ் பெஸ்டிவல் டேஸ் விற்பனையானது அக்.7 ஆம் தேதி நள்ளிரவே தொடங்கும் என்பதையும், அதே போல நீங்களொரு அமேசான் ப்ரைம் மெம்பராக இருந்தால், உங்களுக்கான கிரேட் இந்தியன் பெஸ்டிவல் டேஸ் விற்பனையும் கூட அக்.7 நள்ளிரவே தொடங்கும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி அம்சங்கள்: சோனிக் பிளாக் மற்றும் கேலடிக் சில்வர் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஆனது 120ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவுடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது 16ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 100W சூப்பர்வூக் எஸ் ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.


Click it and Unblock the Notifications








