அமேசான் அதிர போகுது.. 6500எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் ஐக்யூ 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் 6500எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஐக்யூ 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போனுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த சாதனத்தை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஐக்யூ இசட்11 லைட் அம்சங்கள் (iQOO Z11 Lite Specifications): 6.74 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி(LCD) டிஸ்பிளேவுடன் இந்த ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போன் வெளியானது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 1600 x 720 பிக்சல்ஸ், 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் உள்ளட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
அதேபோல் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு(Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் ஐக்யூ இசட்11 லைட் போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)வசதியும் இந்த போனில் உள்ளது.
அதுவும் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 பிரைமரி கேமரா + 0.8எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் ஐக்யூ இசட்11 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஐக்யூ இசட்11 லைட் போன்உடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் வெளியாகி உள்ளது. ஏஐ கிரியேஷன் (AI Creation), ஏஐ கேப்சன் (AI Captions) போன்ற மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மேலும் 6500எம்எஏச் பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் ஐக்யூ இசட்11 லைட் போனில் உள்ளன. அதேபோல் IP65 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உடன் இந்த போன் வெளியாகி உள்ளது.மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் சோலார் ஃபிளேம் (Solar Flame) ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications
