தெரியாம கூட இந்த 5 மொபைல் போன் ஆஃபரையும் மிஸ் பண்ணிடாதீங்க.. Amazon Great Indian Festival Sale ஆரம்பம்!
அனைத்து பயனர்களுக்குமான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை (Amazon Great Indian Festival Sale) ஆனது அக்.8 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ப்ரைம் மெம்பர்களுக்கான (Prime Members) முன்கூட்டிய அணுகல் இன்று முதல் (அதாவது அக்.7 முதல்) தொடங்கியுள்ளது.
வழக்கம் போல இந்தாண்டும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது நம்ப முடியாத சலுகைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களுடைய கவனமெல்லாம் ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபர்கள் மீது மட்டுமே உள்ளதென்றால்.. கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள்.

ஏனென்றால் இந்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் தெரியாமல் கூட நீங்கள் தவற விடக்கூடாத சில அட்டகாசமான மொபைல் போன் ஆபர்களின் பட்டியலைத்தான் நாம் இங்கே பார்க்க போகிறோம். என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? இதோ விவரங்கள்:
01. ஆப்பிள் ஐபோன் 13 (Apple iPhone 13): இந்த விற்பனையின் போது ஆப்பிளின் ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி ஸ்டரோஜ் ரூ.46,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.69,900 ஆகும். நீங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக ரூ.44,649 தள்ளுபடி கிடைக்கும். எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும்.
02. சாம்சங் கேலக்ஸி எம்13 (Samsung Galaxy M13): இந்த ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 விற்பனையின் போது வெறும் ரூ.11,199 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.17,999 ஆகும். தவிர ரூ.10,600 எக்ஸ்சேஞ்ச் சலுகை, நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கும்.
03. ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி (Realme Narzo 60X 5G): இந்த ஸ்மார்ட்போன் அமேசான் விற்பனையின் போது ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த போனின் அசல் விலை ரூ.14,999 ஆகும். மேலும் நீங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யலாம். இதன்கீழ் உங்களுக்கு ரூ.11,300 தள்ளுபடி கிடைக்கும். எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ.1,199 மதிப்புள்ள கூடுதல் தள்ளுபடியை பெறலாம்.
04. சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ 5ஜி (Samsung Galaxy S23 FE 5G): சாம்சங்கின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனின் மீது ரூ.2,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அணுக ப்ராடெக்ட் பேஜில் காட்டப்படும் கூப்பனை கிளிக் செய்தால் போதும். இந்த போனின் மீது எக்ஸ்சேன்ஜ் ஆபரும் கிடைக்கிறது. மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.
05. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G): அமேசான் விற்பனையில் (வங்கி தள்ளுபடிக்குப் பிறகு) இது ரூ.17,499 க்கு வாங்க கிடக்கிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையை பொறுத்தவரை ரூ.18,600 கிடைக்கும். ப்ராடெக்ட் பேஜில் காட்டப்படும் கூப்பனை பயன்படுத்தி ரூ.1,000 பிளாட் தள்ளுபடியையும் பெறலாம். நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கிறது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்: சாம்சங் கேலக்சி எஸ்23 (Samsung Galaxy S23) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.6000 தள்ளுபடியையும் ரூ.8,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) மற்றும் கேலக்ஸி இஸட் போல்ட் 5 (Galaxy Z Fold 5) ஆகியவைகள், மாதத்திற்கு ரூ.7749 என்கிற நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களுடன் வாங்க கிடைக்கிறது.
செக்மென்ட்டின் முதல் குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்ட ஹானர் 90 5ஜி (Honor 90 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ. 26,999 க்கும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) ஸ்மார்ட்போன் ஆனது அனைத்து சலுகைகளையும் சேர்த்து வெறும் ரூ.10,799 க்கும் வாங்க கிடைக்கிறது.
இதுதவிர்த்து ஷாவ்மீ 13 ப்ரோ 5ஜி (Xiaomi 13 Pro 5G), மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra) மற்றும் ஐக்ட்டூ இஸட்7 ப்ரோ 5ஜி (iQoo Z7 Pro 5G) போன்ற பிற ஸ்மார்ட்போன்களும் கூட அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது தள்ளுபடி விலையின் கீழ் மற்றும் பிற சலுகைகளுடன் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








