Home
Mobile

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை: குறைந்த விலையில் கிடைக்கும் ரெட்மி போன்களின் பட்டியல்.!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை வரும் அக்டோபர் 17-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. மேலும் வீட்டு உபயோக பொருட்கள், லேப்டாப், கேமரா, டிவி என அனைத்து சாதனங்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என அமேசான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு

பொதுவாக ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும், காரணம் பட்ஜெட் விலையில் மற்ற சாதனங்களை விட சிறந்த அம்சங்களுடன் வெளிவருகிறது. எனவேதான் இந்தியாவில் ரெட்மி ஸ்மர்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதைப் பற்றிய தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 9

ரெட்மி நோட் 9

ஆரம்பமே அட்டகாசம் என்பது போல ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.16,999-ஆக உள்ளது, ஆனால் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை மூலம் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.53-இன்ச் டிஸ்பிளே, 48எம்பி கேமரா, 5020எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி நோட் 9 ப்ரோ

ரெட்மி நோட் 9 ப்ரோ

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 9 ப்ரோ ஆகும், இதன் உண்மை விலை ரூ.14,999-ஆகும். ஆனால் அமேசான் சிறப்பு விற்பனை மூலம் நீங்கள் ரூ.10,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.67-இன்ச் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு, 5020எம்ஏஎச் பேட்டரி, 64எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.18,999-ஆக உள்ளது, ஆனால் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை மூலம் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.15,999-விலையில் வாங்க முடியும். 6.67-இன்ச் டிஸ்பிளே, 64எம்பி கேமரா, ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட், 5020எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

எம்ஐ 10

எம்ஐ 10

எம்ஐ 10 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.54,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை மூலம் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.44,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.67-இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 865 7என்எம் சிப்செட், 108எம்பி கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 4780 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 8

ரெட்மி நோட் 8

இந்த பட்டியலில் கடைசியாக உள்ள ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன், இதன் உண்மை விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை மூலம் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.11,499-விலையில் வாங்க முடியும். மேலும் 6.3-இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 665 சிப்செட், 48எம்பி கேமரா, 4000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Amazon Great India Festival Sale 2020: Offers On Redmi Smartphones And More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X