Home
Mobile

செம்ம டிமாண்ட்.. ஆஃபரில் 6000mAh பேட்டரி Samsung ஸ்மார்ட்போன்.. 45W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் தளத்தில் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026 (Great Freedom Sale 2026) நடந்து வருகிறது. இதில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் உள்பட பல்வேறு பிராண்ட்களில் மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி (Samsung Galaxy M47 5G) மாடலும் தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது.

அமேசான் தளத்தில் 40 சதவீத தள்ளுபடியுடன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.29,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.28,999 விலைக்கு இந்த சாம்சங் போனை வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.28,200 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைத்து இருக்கிறது.

செம்ம டிமாண்ட்.. ஆஃபரில் 6000mAh பேட்டரி Samsung ஸ்மார்ட்போன்!

சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M47 5G Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்கிரேட்களுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் பெற்று கொள்ளலாம். ஒன் யுஐ 8.5 (Samsung One UI 8.5) உள்ளது.

ஆகவே, க்நாக்ஸ் வால்ட், சாம்சங் வாலெட், ஒன்-டிவைஸ் வாய்ஸ் மெயில் உள்ளிட்ட பிரத்யேக பீச்சர்களை பெற்று கொள்ளலாம். மிட்-பிரீமியம் மாடல்களுக்கு நிகரான பர்ஃபாமென்ஸ் கொடுக்க ஆக்டா கோர் 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa Core 4nm Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) உள்ளது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுடன் 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் நைட்டோபோட்டோகிராபி உள்ளது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 12 எம்பி ஃப்ரன்ட் கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி மற்றும் 8.1 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. மேலும், 206 கிராம் எடை கொண்ட மாடலாக இருக்கிறது. ஆகவே, ஸ்லிம் மற்றும் லைட் வெயிட் மாடலாக இருக்காது.

ரோக் ரெட் (Rogue Red), பிளேஸ் ப்ளூ (Blaze Blue) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளது. சைடு-மவுண்ட் மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. மேலும், கைரோஸ்கோப் சென்சார், ஜியோமேக்னட்டிக் சென்சார், லைட் சென்சார் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Amazon Great Freedom Sale 2026 Samsung Galaxy M47 5G With 6GB RAM Available At Discounted Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X