Home
Mobile

ஆளுக்கு 2 பார்சல்.. ரூ.5400 க்கு 6GB ரேம், 5000mAh பேட்டரி, IP54 ரேட்டிங், DTS டூயல் ஸ்பீக்கர்.. எந்த மாடல்?

2025 சுதந்திர தினத்தை (Independence Day 2025) கொண்டாடும் நோக்கத்தின் கீழ் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் நடக்கும் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் 2025 (Great Freedom Festival Sale 2025) இன் கீழ் பல ஸ்மார்ட்போன்கள் ஆனது "முன்னெப்போதும்" இல்லாத தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதில் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் - ஒரு மாடலை பற்றித்தான் நாம் இங்கே விரிவான பார்க்க உள்ளோம்.

அது டெக்னோ பாப் 9 4ஜி (Tecno POP 9 4G) ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் அதன் அசல் விலையான ரூ.8,499 க்கு பதிலாக ரூ.5,400 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.3099 விலை குறைப்பை பெற்றுள்ளது. இது பேங்க் ஆபரை (Bank Offer) உள்ளடக்கிய விலையாகும்.

ஆளுக்கு 2 பார்சல்.. ரூ.5400 க்கு 6GB ரேம், 5000mAh பேட்டரி, IP54!

நினைவூட்டும் வண்ணம் டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமானது. இது சிங்கிள் 3ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே வாங்க கிடைக்கிறது. இந்த மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும், அவைகள் - கிளிட்டரி ஒயிட், லைம் கிரீன் மற்றும் ஸ்டார்ட்ரெயில் பிளாக் ஆகும்.

டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 720 x 1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 480 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 263 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 20:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது 12 என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி50 சிப்செட்டை (12nm MediaTek Helio G50 chipse) கொண்டுள்ளது. இந்த சிப்செட் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டார்ஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கூடுதலாக 3ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் விரிவாக்கத்தையும் (Virtual RAM expansion) ஆதரிக்கிறது. இதன் மூலம் டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 6ஜிபி ஆக எக்ஸ்டெண்ட் செய்ய முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை இதில் 4எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (4x digital zoom) மற்றும் 1080பி வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு (1080p video recording support) கொண்ட 13 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா யூனிட் உள்ளது. முன் கேமராவில் 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது, இது 1080பி வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது.

பேட்டரியை பொறுத்தவரை இது யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக 15W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டிடிஎஸ் ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் யூனிட்டை (DTS-backed dual stereo speaker unit) கொண்டுள்ளது. மேலும் ஐஆர் ரிமோட் கண்ட்ரோலுக்கான (IR remote control) ஆதரவு, தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் (IP54 Rating) கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Freedom Sale 2025 Tecno POP 9 4G Smartphone Price Drops Into Rs 5400
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X