Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.5,894-க்கு SAMSUNG போன்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 25W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025 Great Freedom Festival Sale 2025 நடக்கிறது. இந்த சேலில் சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதில் வீகன் லெதர் பேனல் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்5 (Samsung Galaxy F05) போன் தள்ளுபடியில் வாங்க கிடைக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் சிப்செட் கொண்ட இந்த கேலக்ஸி எப்5 போனின் விலை, பீச்சர் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் இப்போது ரூ.6,549 விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 போன் வாங்க கிடைக்கிறது. இதுபோக குறிப்பிட்ட பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.654 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.5,895 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போனின் மார்கெட் விலையை பார்க்கையில், ரூ.7,999ஆக இருக்கிறது.

யாரு சாமி அவன்.. ரூ.5,894-க்கு SAMSUNG போன்.. 5000mAh பேட்டரி.. 50MP!

கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேலில் தள்ளுபடி போக மேற்கண்ட கம்மியான விலைக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் வீகன் லெதர் பேனலில் பிரீமியம் பீல் கொடுக்கிறது. இந்த பேனலுடன் ட்வைலைட் ப்ளூ (Twilight Blue) என்னும் ஒரேவொரு கலரில் கிடைக்கிறது. இதுவொரு சாம்சங் பிராண்ட் என்பதால், கஸ்டமர்கள் தாராளமாக வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்5 அம்சங்கள் (Samsung Galaxy F05 Specifications): இந்த சாம்சங் போனில் 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிஎல்எஸ் (PLS) டிஸ்பிளேவுக்கு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் கேமராவில் எந்த குறையும் வைக்கவில்லை.

10X ஜூமிங் கொடுக்கும் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயர் ரியர் செட்டப் உள்ளது. ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் மற்றும் எச்டி (HD) ஸ்லோவ் மோஷன் ரெக்கார்டிங் கிடைக்கிறது. ரியர் கேமராவுக்கு ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது. ஆனால், 8 எம்பி செல்பீ ஷூட்டரில் ஆட்டோ போகஸ் கொடுக்கப்படவில்லை.

அதேபோல, செல்பீ கேமராவுக்கு ஃபிளாஷ் சப்போர்ட் கிடைக்காது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்5 போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஸ்டோரேஜ் கிடைக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (MicroSD) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் மற்றம் ஆரம் மாலி ஜிபியு கிடைக்கிறது.

அதேபோல 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்டுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஒன்யுஐ கோர் 6.0 (OneUI Core 6.0) கிடைக்கிறது. மேலும், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் பெற்று கொள்ளலாம். இந்த ரூ.6000 பட்ஜெட் செக்மெண்ட்டிலும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. 5000mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 ஒரு 4ஜி மாடலாக இருக்கிறது. ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) உள்ளது. மேலும், ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) கிடைக்கிறது. ஜிபிஎஸ் (GPS) பேக் செய்கிறது. சைடு-மவுண்ட் ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Freedom Festival Sale 2025 Samsung Galaxy F05 4GB RAM Available At Discounted Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X