Home
Mobile

Amazon Great Freedom Festival sale 2021: டாப் 5 கேமரா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

By Gizbot Bureau

அமேசான் தளத்தில் Amazon Great Freedom Festival sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் ஆனது ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 -ம் தேதி முடிவடைகிறது.

விற்பனையில் டாப் 5 கேமரா

தற்போது இந்த சிறப்பு விற்பனையில் டாப் 5 கேமரா ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சலுகை
விலையில் வாங்குவதற்கு இதுவே சரியான நேரம். இப்போது விலைகுறைக்கப்பட்ட அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.22,999-ஆக உள்ளது. ஆனால் தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 6.67-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட்,108எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 5020 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்.

 மி 10ஐ 5ஜி

மி 10ஐ 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மி 10ஐ 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையின் மூலம் ரூ.21,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 12 சதவிகிதம் இந்த சாதனத்திற்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 6.67-இன்ச் டிஸ்பிளே, ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட்,108MP ரியர் கேமரா, 4820 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, உள்ளிட்ட பலவேறு முக்கியமான அம்சங்களுடன் இந்த அசத்தலான மி 10ஐ 5ஜி சாதனம் வெளிவந்துள்ளது.

ரியல்மி 8 ப்ரோ

ரியல்மி 8 ப்ரோ

அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.19,290-விலையில் வாங்க முடியும். குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது
6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 108எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்51

சாம்சங் கேலக்ஸி எம்51

அமேசான் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.30,999-ஆக உள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் ரூ.21,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.7-இன்ச்
டிஸ்பிளே, 64எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட், 7000 எம்ஏஎச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.23,999-ஆக உள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையின் மூலம் ரூ.21,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.6-இன்ச் டிஸ்பிளே, 48எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Amazon Great Freedom Festival sale 2021: Best offers for top 5 camera smartphones: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X