Amazon Great Freedom Festival 2021: ஐபோன், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.!
அமேசான் தளத்தில் நடைபெறும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் நாம் எதிர்பார்த்த அசத்தலான ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் ஆனது ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 -ம் தேதி முடிவடைகிறது.

குறிப்பாக அமேசான் தளத்தில நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஐபோன், ஒன்பிளஸ் உள்ளிட்ட அருமையான ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 12 (256ஜிபி)
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 12 மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 மாடலுக்கு ரூ.11,901-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சாதனத்தைரூ.82,999-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 13 சதவிகிதம் இந்த சாதனத்திற்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 12 சாதனம் ஆனது A14 பயோனிக் சிப் மற்றும் 12எம்பி அல்ட்ரா கேமரா உட்பட டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஐபோன் 12 சாதனம்.

ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போது அமேசான் வலைத்தளத்தில் 8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி மாடலை ரூ.39,999-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.55-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி சிப்செட், 48எம்பி ரியர்கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் இந்த அசத்தலான ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சியோமி மி 11எக்ஸ் ப்ரோ 5ஜி
அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 11எக்ஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.8000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.41,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.67-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி சிப்செட், 108எம்பி ரியர் கேமரா, 20எம்பி செல்பீ கேமரா, 4520எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ்
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.8000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சாதனம் ரூ.16,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 6.5-இன்ச்டிஸ்பிளே, ஆக்டோ-கோர் எக்ஸிநோர் 9611 சிப்செட் வசதி, 64எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன்.

iQOO Z3 5G ஸ்மார்ட்போன்
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட iQOO Z3 5G ஸ்மார்ட்போனுக்கு ரூ.4000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சாதனம் ரூ.22,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி 5ஜி சிப்செட், 64எம்பி ரியர் கேமரா,16எம்பி செல்பீ கேமரா, 4400 எம்ஏஎச் பேட்டரி மற்றும்சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications