Home
Mobile

வுட்றாதீங்க.. இனி இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது.. ரூ.40,000 விலை குறைப்பை பெற்ற Samsung போன்.. என்ன மாடல்?

அற்புதமான கேமரா, அட்டகாசமான பேட்டரி மற்றும் "போதும் போதும்" என்கிற அளவிற்கு ஸ்டரோஜுடன் வரும் ஒரு சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy) ஸ்மார்ட்போன் மீது முழுதாக ரூ.40,000 நேரடி தள்ளுபடி (Flat Discount) கிடைக்கிறது. அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் பழைய மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி (Samsung Galaxy S20 FE 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். அனைத்து வகையான பிரீமியம் அம்சங்களையும் கொண்ட இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை மிகமிக மலிவான விலைக்கு வாங்குவதற்கு இதுவே சிறந்த நேரம்.

ரூ.40,000 விலை குறைப்பை பெற்ற Samsung போன்..  என்ன மாடல்?

ஏனென்றால் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவானது (Amazon India), சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனை 53% ஆஃபர் விலையில் (53% Offer Price) விற்பனை செய்கிறது. அதாவது ரூ.40000 தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை (Original Price) ரூ.74,999 ஆகும்.

ஆனால் தற்போது இது வெறும் ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கிறது. இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 53% என்கிற நேரடி தள்ளுபடியை தவிர்த்து கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி மீது எக்ஸ்சேஞ்ச் டீல் (Exchange Deal) மற்றும் பேங்க் ஆஃபர்களும் (Bank Offers) அணுக கிடைக்கிறது. இதன் மூலம் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி மாடலின் விலையை இன்னும் குறைக்க முடியும்.

எக்ஸ்சேஞ்ச் டீலை பொறுத்தவரை, உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்தால், உங்களுக்கு ரூ.30,000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். இந்த இடத்தில், உங்களுக்கு கிடைக்கும் எக்ஸ்சேன்ஜ் வேல்யூ (Exchange Value) ஆனது நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்யும் ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் அதன் தற்போதைய நிலைமையை பொறுத்து வேறுபடும்.

பேங்க் ஆஃபர்களை பொறுத்தவரை, எச்டிஎப்சி பேங்க் (HDFC Bank) கார்டுகளின் கீழ் நடக்கும் இஎம்ஐ பரிவர்த்தனைக்கு ரூ.1250 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இது ரூ.15000 என்கிற குறைந்தபட்ச கொள்முதல் மதிப்பின் கீழ் கிடைக்கும் தள்ளுபடியாகும். ஒருவேளை உங்களுடைய குறைந்தபட்ச கொள்முதல் மதிப்பு ரூ.40,000 ஆக இருந்தால் ரூ.3000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.5 இன்ச் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவை (Super AMOLED Display) கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 856 சிப்செட் (Qualcomm Snapdragon 856 Chipset) கொண்டு இயங்குகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உள்ளது. அதில் 12 எம்பி ப்ரைமரி ஷூட்டர் + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8 எம்பி டெலிஃபோட்டோ கேமராக்கள் உள்ளது.

முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் 32 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. கடைசியாக இந்த சாம்சங் கேலக்ஸி ஃபேன் எடிஷன் (Samsung Galaxy Fan Edition) ஸ்மார்ட்போன் ஆனது 4500எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? கண்டிப்பாக வாங்கலாம். ஏனென்றால் இது காம்பாக்ட் ஆன வடிவமைப்பை (Compact Design) பெற்றுள்ளது. கூடவே இது இன்னமும் சிறந்த செயல்திறனை (Excellent Performance) வழங்கும் ஸ்மார்ட்போனாகவும் உள்ளது. கூடவே இது ஐபி68 ரேட்டிங்கை (IP68 Rating) கொண்டுள்ளது. கடைசியாக இது நீண்ட கால பேட்டரி லைஃப்பையும் (Long-lasting battery life) வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Gives 53 Percentage Massive Initial Discount on Samsung Galaxy S20 FE 5G phone Buy or Not
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X