இப்படி ஒரு சான்ஸ் இனி கிடைக்காது.. இந்த OnePlus போன் மீது ரூ.7000 விலை குறைப்பு.. ரூ.5000 தள்ளுபடி!
அமேசான் இந்தியா வலைதளத்தின் மிக முக்கியமான சிறப்பு விற்பனைகளில் ஒன்றான அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையானது ஏற்கனவே நேரலையில் உள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையானது ஆகஸ்ட் 8 வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல இந்த சிறப்பு விற்பனையின் போதும் பல வகையான ஸ்மார்ட்போன்கள் மீது மாபெரும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. அவைகளில் ஒன்பிளஸ் 10டி (OnePlus 10T) மீது கிடைக்கும் சலுகைகள் ஆனது, குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் விலையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைத்துள்ளது.

நினைவூட்டும் ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, நடந்துகொண்டிருக்கும் கிரேட் ஃப்ரீடம் விற்பனையின் போது இது ரூ.7000 என்கிற நேரடி விலை குறைப்பையும், கூடுதலாக ரூ.5,000 என்கிற உடனடி தள்ளுபடியையும் பெற்றுள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் சிப்செட் (Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC) மற்றும் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? ஆஃபர் விலை நிர்ணயம் என்ன? 1 ஆண்டு பழைய ஸ்மார்ட்போனான இதை இப்போதும் நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இதோ வாருங்கள்:
ஒன்பிளஸ் 10டி மீதான அமேசான் சலுகைகள்: ரூ.54,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் விலையானது அமேசான் சிறப்பு விற்பனையின் போது ரூ.47,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது ரூ.5,000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்; இப்படியாக ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் இறுதி விலையை ரூ.42,999 க்கு கொண்டு வர முடியும்.
ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? இந்த கேள்விக்கான பதிலை மேலோட்டமாக கூறிவிட முடியாது. முதலில் இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது என்பதை பற்றி பார்ப்போம். பின்னர் இதை வாங்கலாமா வேண்டாமா? இதற்கு பதிலாக வேறு என்ன ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி, இது அட்ரெனோ ஜிபியு உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8பிளஸ் ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான LPDDR5 ரேம் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜுடன் அனுப்பப்படுகிறது.
மேலும் இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10பிளஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் லேயர் ஆகியவற்றை கொண்ட 6.7-இன்ச் FHD+ 10-பிட் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது.
அதில் OIS ஆதரவுடன் 50MP Sony IMX766 ப்ரைமரி கேமரா + 8MP அல்ட்ரா-வைட் கேமரா + 2MP மேக்ரோ கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 150W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,800mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? வேண்டாமா? கடந்த ஆண்டு மாடலாக இருந்தாலும், ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், AMOLED டிஸ்பிளே, 5ஜி ஆதரவு, 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50MP மெயின் கேமராவை வழங்குகிறது.
ஒருவேளை நீங்கள் சிறந்த மென்பொருள் ஆதரவுடன், இந்த ஆண்டில் அறிமுகமான பிளாக்ஷிப் போனைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் இன்னும் கொஞ்சம் பணம் செலவழித்து ஒன்பிளஸ் 10டி மாடலுக்கு பதிலாக புதிய ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனை வாங்கலாம். இல்லையென்றால் நீங்கள் நத்திங் போன் 2-வை கூட கருத்தில் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








