Home
Mobile

NOKIA இஸ் பேக்.. முதல் விற்பனையிலேயே ரூ.2000 ஆபர்.. Amazon Freedom Sale-ஐ அதிர விடும் HMD Crest 5G போன்கள்!

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் கொண்ட பெரும்பாலான இந்தியர்கள், இந்நேரம் என்னென்ன வாங்க வேண்டும் என்கிற பட்டியலை உருவாக்கி தொடங்கி இருப்பார்கள். ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் சுந்தந்திர தினத்தை முன்னிட்டு நடக்கும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் 2024 எடிஷன் ஆனது (Amazon Great Freedom Festival Sale 2024) ஆக.6 முதல் தொடங்க உள்ளது. ப்ரைம் மெம்பர்களுக்கான முன்கூட்டிய அணுகல் ஆக.6 அதிகாலை 12 மணி முதல் திறக்கப்பட உள்ளது . மீதமுள்ள அனைவருக்குமான அணுகல் ஆக.6 மதியம் 12 மணி முதல் திறக்கப்பட உள்ளது .

2024 ஆம் ஆண்டிற்கான அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ் என்னென்ன தயரிப்புகள் மீது என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும் என்கிற விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில்.. உங்களுடைய கவனம் முழுவதும் ஸ்மார்ட்போன்கள் மீதான டிஸ்கவுண்ட் மீது மட்டுமே இருந்தால்.. முதல் விற்பனையிலேயே அபராமான விலைக்குறைப்பை ஒரு புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.

ரூ.2000 ஆபர்.. Amazon Freedom Sale-ஐ அதிர விடும் HMD Crest 5G போன்கள்!

அது எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி சீரீஸ் (HMD Crest 5G Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும். இவைகள் நோக்கியா (NOKIA) பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் ஆகும். நினைவூட்டும் வண்ணம் இவ்விரு மாடல்களும் கடந்த ஜூலை மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் தொடங்கும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது முதல் முறையாக விற்பனைக்கு வரவுள்ளன. சுவாரஸ்யமாக முதல் விற்பனையிலேயே இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே அபாரமான தள்ளுபடி விலையின்கீழ் விற்பனை செய்யப்பட உள்ளன. அப்படி என்ன தள்ளுபடி? இந்த ஸ்மார்ட்போன்களின் அசல் விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கின்றன? இதோ விவரங்கள்:

ரூ.2000 ஆபர்.. Amazon Freedom Sale-ஐ அதிர விடும் HMD Crest 5G போன்கள்!

அசல் விலை மற்றும் ஆபர் விலை : எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.14,999 ஆகும். இருப்பினும் இது அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.12,999 என்கிற சிறப்பு சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கும். இதேபோல எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.16,999 ஆகும். இது ரூ.14,999 என்கிற சிறப்பு சலுகை விலையின் கீழ் விற்பனை செய்யப்படும் .

முக்கிய அம்சங்கள்: எச்எம்டி க்ரெஸ்ட் சீரிஸின் கீழ் வெளியாகியுள்ள இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 6.67-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன; இரண்டு ஸ்மார்ட்போன்களுமே யுனிசாக் டி760 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. இரண்டுமே 5,000mAh பேட்டரியை பேக் செய்கின்றன மற்றும் ஈஸி செல்ஃப் ரிப்பேர் அம்சங்களுடன் (Easy self-repair features) வருகின்றன.

முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை, இரண்டுமே 50 மெகாபிக்சல் செல்பீ கேமராக்களை கொண்டுள்ளன . ஆனால் எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது; மறுகையில் உள்ள எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது .

எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி மற்றும் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஆகிய இரண்டுமே ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் வருகின்றன. எச்எம்டி க்ரெஸ்ட் மாடல் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் மாடல் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

மேலும் எச்எம்டி க்ரெஸ்ட் ஆனது 6ஜிபி விர்ச்சுவல் ரேமை வழங்குகிறது, எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் ஆனது 8ஜிபி மெய்நிகர் ரேமை வழங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை, எச்எம்டி க்ரெஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ-ஆதரவு கொண்ட 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

மறுகையில் உள்ள எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 64 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளன. முன்பக்க கேமராவை பொறுத்தவரை, எச்எம்டி க்ரெஸ்ட் மற்றும் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஆகிய இரண்டுமே 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இரண்டு போன்களிலும் 33W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Freedom Sale 2024 Buy HMD Crest 5G For Rs 12999 HMD Crest Max 5G For Rs 14999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X