அமேசான் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

|

அமேசான் தளத்தில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்சமயம் அமேசான் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனை எனும் பெயரில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கிறிஸ்துமஸ் தினம் வரை இருக்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது பரந்த அளவிலான ஸ்மார்ட்போன்களின் மீதான தள்ளுபடிகள் மற்றும் அசத்தலான சலுகைகள் கிடைக்கும்.

15000 வரையிலான தள்ளுபடியும் கிடைக்கும் என்று

குறிப்பாக அமேசான் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ.15000

வரையிலான தள்ளுபடியும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது அமேசானின் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனையின் போது கிடைக்கக்கூடிய சில பெஸ்ட் டீல்ஸ் மற்றும் ஆபர்களை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்51

சாம்சங் கேலக்ஸி எம்51

அமேசானின் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனை ரூ.21,749-க்கு வாங்கலாம். மேலும் இந்த சாதனத்தில் 6.7-இன்ச் சூப்பர் அமோலேட் பிளஸ் டிஸ்பிளே, குவாட் ரியர் கேமரா வசதி, 7000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

'டப்பா to டாப்-டக்கர்' ஆனா ஐபோன்.. உலகின் முதல் ஐபோன் பற்றி தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க..'டப்பா to டாப்-டக்கர்' ஆனா ஐபோன்.. உலகின் முதல் ஐபோன் பற்றி தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க..

ஒன்பிளஸ் நோர்ட்

ஒன்பிளஸ் நோர்ட்

இந்த சிறப்பு விற்பனையில் எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு வழியாக பணம் செலுதுவதின் மூலம் ஒன்பிளஸ் நோர்ட் மாடல் மீது ரூ.1000 என்கிற தள்ளுபடி கிடைக்கும். மேலும் உங்கள் பழைய ஸ்மார்ட்போன் மாடலை எக்ஸ்சேன்ஜ் செய்வதின் மூலம் ரூ.15000 வரை கூடுதல் உடனடி தள்ளுபடியும் பெறமுடியும்.

 சாம்சங் கேலக்ஸி எம்31எஸ்

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ்

அமேசானின் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் சிறப்பு விற்பனையில் அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் சாதனத்தை ரூ.18,499 க்கு வாங்க கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி கேலக்ஸி எம்31எஸ் சாதனத்தை வாங்கினால் ரூ.1500 வரையிலான தள்ளுபடியும் கிடைக்கும். பின்பு எக்ஸ்சேன்ஜ் சலுகையின்கீழ் அதிகபட்சமாக ரூ.15,000 தள்ளுபடியை பெறலாம்.

ரெட்மி 9 ப்ரைம்

ரெட்மி 9 ப்ரைம்

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, ஆனால் இந்த இந்த சிறப்பு விற்பனையின் போது ரூ.10,999-க்கு வாங்க கிடைக்கும். மேலும் எக்ஸ்சேன்ஜ் சலுகையின் கீழ் பட்டியலிடப்பட்ட விலையிலிருந்து ரூ.10,300 (அதிகபட்சம்) தள்ளுபடியை பெறலாம்.

நோக்கியா 5.3

நோக்கியா 5.3

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் உண்மைய விலை ரூ.16,599-ஆகும். ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.11,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.55-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, குவாட் ரியர் கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஒசி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸஸ் 8டி

ஒன்பிளஸஸ் 8டி

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்படவிலை. ஆனாலும் கூட நீங்கள் ரூ.2,000-ஐ சேமிக்க உதவும் கூப்பன் உங்களுக்கு அணுக கிடைக்கும். நீங்கள் கூப்பனைச் சேகரித்த பிறகு, உங்கள் ஆர்டர் அனுப்பப்பட்ட 3 நாட்களுக்குள் ஃப்ளாஷ்பேக்கைப் பெறுவீர்கள். மேலும் இந்த கூப்பன் எல்லா அக்கவுண்ட்களிலும் வேலை செய்யாது என்பதையும் கவனத்திலும் கொள்ளவும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் ஒன்பிளஸ் 8டி-க்கு பணம் செலுத்துவதன் மூலம் நீங்கள் ரூ.2000-ஐ சேமிக்கக்கூடிய மற்றொரு வழியும் உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Fab Phones Fest December 2020 Sale: Best Deals and Discounts on Smartphones: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X