அமேசான்: ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத தள்ளுபடி அறிவிப்பு.!
அமேசான் வலைதளத்தில் Amazon Fab Phones Fest எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு சலுகை வரும் 30-ம் தேதி வரை இருக்கும் என அமேசான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு சாம்சங் உட்பட முன்னணி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 7:
ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு no cost EMI (இஎம்ஐ) வசதி 12மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.32,999-ஆக உள்ளது.

ஒப்போ ஆர்17:
ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.45,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.22,9990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹுவாய் P30 ப்ரோ :
ஹுவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் ரூ.71,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் அமேசான் அறிவித்துள்ள இந்த சிறப்பு சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.63,990-விலையில் வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்40:
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் மாடலுக்கு no cost EMI 6மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.19,990-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 6.1 பிளஸ்:
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications