Home
Mobile

விட்ராதீங்க சார்.. ரூ.5000 டிஸ்கவுண்ட்.. அடிமட்ட விலையில் OnePlus போன்கள்.. பட்ஜெட் முதல் பிரீமியம் வரை!

ஒன்பிளஸ் பிரியர்கள் அறக்க பறக்க ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட் அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் விற்பனையில் (Amazon Electronics Premier League Sale) கிடைக்கிறது. ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் ஆகிய மாடல்களுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13 அம்சங்கள், விலை (OnePlus 13 Specifications Price): இந்த போனில் கிரிஸ்டல் ஷீல்டு சூப்பர் செராமிக் கிளாஸ் (Crystal Shield Super Ceramic Glass) புரொடெக்சன் கொண்ட 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதில் 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

விட்ராதீங்க சார்! ரூ.5000 டிஸ்கவுண்ட்.. அடிமட்ட விலையில் OnePlus போன்!

அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி 808) கிடைக்கிறது.

50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா (சாம்சங் ஜேஎன்1 சென்சார்) + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (சோனி எல்ஒய்டி600 சென்சார்) கிடைக்கிறது. மேலும், 32 எம்பி செல்பீ ஷூட்டர் (சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார்) கிடைக்கிறது. இதுவொரு 120X டிஜிட்டல் ஜூம் மற்றும் 6X இன்சென்சார் ஜூம் கொண்ட ஹசல்பிளாட் கேமரா சிஸ்டமாகும் (Hasselblad Camera System).

6000mAh பேட்டரி மற்றும் 100W சூப்பர்வூக் சார்ஜிங் கிடைக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் 13 போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.69,998ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் விற்பனையில் ரூ.5000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.64,998 விலைக்கு ஆர்டருக்கு கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13ஆர் அம்சங்கள், விலை (OnePlus 13R Specifications Price): இந்த ஒன்பிளஸ் போனிலும் 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்கிறது. அதேபோல ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (4nm Octa Core Snapdragon 8 Gen 3) கிடைக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமல்லாமல் 2160Hz PWM டிம்மிங் சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி 700 சென்சார் + ஓஐஎஸ்) பேக் செய்யப்பட்டுள்ளது.

8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சார்) மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா (சாம்சங் ஜேஎன்5 சென்சார்) கொண்ட பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் (சோனி ஐஎம்எக்ஸ்480) சென்சார் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் 13ஆர் போனில் 6000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் சார்ஜிங் கிடைக்கிறது.

இந்த போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.42,998ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் விற்பனையில் ரூ.3,000 உடனடி டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.39,998 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஐசிஐசிஐ பேங்க் கிரெடிக் கார்டுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 அம்சங்கள் (OnePlus Nord CE4 Specifications Price): இந்த நோர்ட் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) மற்றும் அட்ரினோ 720 ஜிபியு ( Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனில் 6.7 இன்ச் (2412 x 1080 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 600 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்355) மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனில் 5500mAh பேட்டரி மற்றும் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.2000 டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு வருகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி அம்சங்கள், விலை (OnePlus Nord CE4 Lite 5G Specifications Price): ஆக்ஸிஜன்ஓஎஸ் 14, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் (Qualcomm Snapdragon 695 6nm) சிப்செட் கிடைக்கிறது. 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது.

Take a Poll

120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமராவை பேக் செய்கிறது. சோனி எல்ஒய்டி 600 சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி உள்ளது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் 5500mAh பேட்டரி கிடைக்கிறது. இதற்கு 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,998ஆக இருக்கிறது. இப்போது அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் விற்பனையில் ரூ.1000 டிஸ்கவுண்ட் போக ரூ.16,998-க்கு கிடைக்கிறது. இந்த விலைகள் மற்றும் டிஸ்கவுண்ட் அடிக்கடி மாறக்கூடியதாகும். ஆகவே, சிறப்பு விற்பனைக்கு மட்டுமே பொருந்தும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Electronics Premier League Sale Deals on OnePlus Mobiles Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X