வெளுக்குது விற்பனை.. ரூ.18489 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஐக்யூ பிரியர்களுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது, அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் விற்பனையில் (Amazon Electronics Premier League Sale Deals) 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 5500mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொண்ட ஐக்யூ இசட்9எஸ் 5ஜி (iQOO Z9s 5G) போன் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இதேபோல ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G) மற்றும் ஐக்யூ இசட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G) போனுக்கும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
ஐக்யூ இசட்9எஸ் 5ஜி அமேசான் சேல் (iQOO Z9s 5G Amazon Sale): இந்த ஐக்யூ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) மற்றும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Octa Core 4nm MediaTek Dimensity 7300) சிப்செட் கிடைக்கிறது.

6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLOED) டிஸ்பிளே, எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இந்த ஐக்யூ இசட்9எஸ் 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா (சோனி ஐஎம்எக்ஸ் 882 சென்சார் + ஓஐஎஸ்) பேக் செய்யப்பட்டுள்ளது.
ஆரா எல்இடி + 2 எம்பி டெப்த் சென்சாருடன் டூயல் ரியர் செட்டப் உள்ளது. 16 எம்பி செல்பீ கிடைக்கிறது. 5500mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP64 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
இந்த ஐக்யூ இசட்9எஸ் 5ஜி போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.19,998ஆக இருக்கிறது. ஆனால், அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் விற்பனையை முன்னிட்டு ரூ.1500 டிஸ்கவுண்ட் போக ரூ.18,498 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு டிஸ்கவுண்ட் வருகிறது.
ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி அமேசான் சேல் (iQOO Z9x 5G Amazon Sale): இந்த ஐக்யூ மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், பன்டச்ஓஎஸ் 14, அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Octa Core 4nm Snapdragon 6 Gen 1) சிப்செட் கிடைக்கிறது. 6.72 இன்ச் (2408 x 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே உள்ளது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங் உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலை ரூ.14,499ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது அமேசான் சலுகையில் ரூ.11,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
ஐக்யூ இசட்9 லைட் 5ஜி அமேசான் சேல் (iQOO Z9 Lite 5G Amazon Sale): 6.56 இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா உள்ளது. 5000mAh பேட்டரி, 15W சார்ஜிங் கிடைக்கிறது. 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ.11,499ஆக இருக்கிறது. அமேசான் சலுகையில் ரூ.1000 டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








