தீபாவளிக்கு அதிரவிட்ட அமேசான்.. கம்மி பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, IP69 ரேட்டிங், 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தரமான ரியல்மி 14எக்ஸ் 5ஜி (realme 14X 5G) ஸ்மார்ட்போன் மாடலும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் ஐபி69 ரேட்டிங், 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தீபாவளி சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.11749 விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி 14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 14x 5G specifications): ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் ரியல்மி 14எக்ஸ் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். எனவே இந்த சாதனத்தை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம்.
6.7-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720×1604 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த ரியல்மி போன் 50எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. அதேபோல் realme UI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது. மேலும் அல்ட்ரா லீனியர் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom-ported Speaker)வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
அதேபோல் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட் பல்வேற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனில் உள்ளன. ஜூவல் ரெட் (Jewel Red), கிரிஸ்டல் பிளாக் (Crystal Black) மற்றும் கோல்டன் க்ளோ (Golden Glow) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போன்.


Click it and Unblock the Notifications








