ரூ.6799 போதும்.. அமேசான் Black Friday சேலில் அடிமட்ட விலைக்கு வந்த Samsung 4ஜி, 5ஜி போன்கள்!
அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது அமேசான் பிளாக் ஃப்ரைடே சேல் 2025 (Amazon Black Friday Sale 2025) என்கிற விற்பனையின் கீழ் பல வகையான சாம்சங் ஸ்மார்ட்போன்கள் (Samsung Smartphones) மீது மீது அபாரமான தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகளை வழங்குகிறது. அமேசான் பிளாக் ஃப்ரைடே சேல் 2025-ன் கீழ் என்னென்ன சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன ஆபர், டிஸ்கவுண்ட் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7): இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,52,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இதில் வங்கி தள்ளுபடிகளும் அடங்கும். கூடுதலாக ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.1,74,999 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6): கடந்த 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது நடப்பு அமேசான் பிளாக் ஃப்ரைடே சேல் 2025 விற்பனையின் போது கார்டு சலுகைகளுக்கு பிறகு ரூ.1,09,999 என்கிற (ஒப்பீட்டளவில் குறைந்த) விலையில் வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.1,64,999 ஆகும்.
மிட்-ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்: ஃபோல்டபிள் போன்களை தவிர, அமேசான் பிளாக் ஃப்ரைடே சேல் 2025 விற்பனையின் கீழ் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் மீதும் தள்ளுபடி கிடைக்கிறது. குறிப்பாக ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ55, அதன் வழக்கமான விலையான ரூ.42,999 க்கு பதிலாக ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இதேபோல சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி, கேலக்ஸி எம்07, கேலக்ஸி எம்36 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றை முறையே ரூ.12,499, ரூ.6,799, ரூ.13,999 மற்றும் ரூ.8,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது
நிகழும் அமேசான் பிளாக் ஃப்ரைடே சேல் 2025 விற்பனையில் ஸ்மார்ட்போன்களின் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதற்கிடையில், ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் எச்டிஎப்சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் வைத்திருப்பவர்கள் 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியையும் பெறலாம். இதேபோல் அமேசான் பே ஐசிஐசிஐ (Amazon Pay ICICI) வங்கி கிரெடிட் கார்டு உள்ளவர்கள் 10 சதவீத தள்ளுபடியை பெறலாம்.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 1968 x 2184 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 368பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 2600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 8 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளே
- 6.5 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்பிளே
- 1080 x 2520 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 422பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 21:9 எக்ஸ்டர்னல் டிஸ்பிளே ரேஷியோ
- ஒரு ஆர்மர் ஃப்ளெக்ஸ்ஹிஞ்சை கொண்டுள்ளது
- கவர் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16GB வரை ரேம்
- 3 எக்ஸ்டர்னல் கேமரா யூனிட்
- குவாட் பிக்சல் ஆட்டோஃபோகஸ், ஓஐஎஸ் ஆதரவு மற்றும் 85-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவுடன் கூடிய 200 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- கவர் டிஸ்பிளேவில் 10 மெகாபிக்சல் கேமரா
- இன்னர் ஸ்க்ரீனில் மற்றொரு 10 மெகாபிக்சல் கேமராவு
- சாம்சங்கின் ப்ரோவிஷுவல் எஞ்சினின் புதிய வெர்ஷன்
- டூயல் சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான யுஐ 8 ஓஎஸ்
- ஜெமினி லைவ், ஏஐ ரிசல்ட்ஸ் வியூ, சர்க்கிள் டு சர்ச், டிராயிங் அசிஸ்ட், ரைட்டிங் அசிஸ்ட் போன்ற பல ஏஐ அம்சங்கள்
- 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்
- 5ஜி, எல்டிஇ, வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- மேம்பட்ட ஆர்மர் அலுமினிய ஃபிரேம்
- ஐபி48 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீடு
- 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4400mAh பேட்டரி
- 25W அடாப்டர் மூலம் 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்
- பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆதரவு
- அளவீட்டில் விரிக்கப்பட்ட நிலையில் 4.2 மிமீ தடிமன்; மடிக்கும்போது 8.9 மிமீ தடிமன்
- எடை 215 கிராம்


Click it and Unblock the Notifications








