iPhone 14-ஐ இவ்ளோ கம்மி விலைக்கு வாங்க.. இதை விட சூப்பர் சான்ஸ் கிடைக்காது.. அசத்தும் Amazon Apple Days Sale!
அமேசான் நடத்தும் ஆப்பிள் டேஸ் சேல் ஆனது ஏற்கனவே நேரலையில் உள்ளது (இது ஜூன் 11 ஆம் தேதியே தொடங்கிவிட்டது) மற்றும் இது வருகிற ஜூன் 17 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த சிறப்பு விற்பனையின் கீழ் எந்தெந்த லேட்டஸ்ட் ஐபோன் மாடல்கள் மீது என்னென்ன நேரடி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்கிற விவரங்கள் இதோ:
இந்த விற்பனையின் போது, கடந்த ஆண்டு அறிமுகமான ஆப்பிள் ஐபோன் 14 சீரீஸின் (Apple iPhone14 Series) அனைத்து மாடல்கள் மீதும் சலுகைகள் கிடைக்கிறது. அதாவது ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus), ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) ஆகிய 4 மாடல்கள் மீதுமே சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 14 மீதான ஆப்பிள் டேஸ் சலுகைகள்: 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் ஆப்பிள் ஐபோன் 14 ஆனது அதன் அசல் விலையான ரூ.79,999-க்கு பதிலாக ரூ.67,999-க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல், ஐபோன் 14-ன் 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.89,900-க்கு பதிலாக ரூ.77,999-க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக உள்ள 512 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.1,09,900-க்கு பதிலாக ரூ.97,999-க்கு வாங்க கிடைக்கிறது.
ஐபோன் 14 பிளஸ் மீதான ஆப்பிள் டேஸ் சலுகைகள்: ஐபோன் 14 பிளஸ் மாடலின் 128 ஜிபி வேரியண்ட் ஆனது அதன் அசல் விளையான ரூ.89,900 க்கு பதிலாக ரூ.76,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் ஐபோன் 14 பிளஸ் ஆனது அதன் அசல் விலையான ரூ.99,900 க்கு பதிலாக ரூ.86,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஐபோன் 14 ப்ரோ மீதான ஆப்பிள் டேஸ் சலுகைகள்: ஐபோன் 14 ப்ரோ மாடல் மீது சுமார் 9 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 14 ப்ரோ அந்த அதன் அசல் விலையான ரூ.1,29,900 க்கு பதிலாக ரூ.1,19,999 க்கு வாங்ககிடைக்கிறது. இதேபோல 256 ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.1,39,900 க்கு பதிலாக ரூ.1,34,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மீதான ஆப்பிள் டேஸ் சலுகைகள்: ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல் மீதும் 9 சதவீதம் வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது. இதன் கீழ், ரூ.1,39,900 க்கு வாங்க கிடைத்த 128 ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.1,27,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரூ.1,49,900 க்கு வாங்க கிடைத்த 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.1,43,990 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications