குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி!

|

ஸ்மார்ட்போன்களில் இந்திய சந்தையை ஆக்கிரமித்து வரும் சியோமி நிறுவனத்தின் குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்த சியோமி

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்த சியோமி

சீன நிறுவனமான சியோமி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்துள்ள பிராண்டுகளில் பிரதான ஒன்று. சியோமி இந்தியாவில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்திய சந்தையை ஆக்கிரமித்து வரும் சியோமி தனது ஸ்மார்ட்போன்களை அனைத்து விலை புள்ளிகளிலும் வெளியிட்டு வருகிறது.

அமேசான் இ-காமர்ஸ் தளம்

அமேசான் இ-காமர்ஸ் தளம்

அதேபோல் அமேசான் இ-காமர்ஸ் தளம் மிகவும் நம்பகமான பிரபலமான தளமாகும். பொதுவாக எம்ஐ மாடல் போன் வெளியிட்ட உடன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருவது வழக்கம். அதேபோல் அமேசானில் சியோமி தங்களது ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் சலுகை, தள்ளுபடிகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.

சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!

Mi 10 5G ஸ்மார்ட்போன்

Mi 10 5G ஸ்மார்ட்போன்

Mi 10 5G சியோமி ஸ்மார்ட்போனானது, 108 MP முதன்மை கேமராவுடன் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 SoC ஆல் இயக்கப்படுகிறது. அதோடு 30W வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் ரூ.3,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதோடு சிறந்த இஎம்ஐ கட்டண விருப்பங்களும் இதில் உள்ளது.

ரெட்மி நோட் 8 ப்ரோ

ரெட்மி நோட் 8 ப்ரோ

சியோமியின் பிரபலமான மாடல்களில் ஒன்றான ரெட்மி நோட் 8 ப்ரோ 64 எம்பி ஏஐ ரியர் குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி செயலி மற்றும் 20 எம்பி செல்பி கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த சாதனம் அமேசானில் ஆறு மாதங்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையோடு கிடைக்கிறது.

எம்ஐ ஏ 3

எம்ஐ ஏ 3

இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி முதன்மை பின்புற கேமரா மற்றும் 32 எம்பி செல்பி கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 4,030 mAh பேட்டரியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை அமேசான் மூலம் ஆறு மாத இஎம்ஐ விருப்பத்தில் வாங்கலாம்.

ரெட்மி கே 20 ப்ரோ

ரெட்மி கே 20 ப்ரோ

ரெட்மி கே 20 ப்ரோ ஸ்னாப்டிராகன் 855 SoC, பாப்-அப் செல்பி கேமரா சென்சார், டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு கிடைக்கிறது. மேலும் இந்த போன் கேம்களுக்கு சிறந்த சலுகையாக கிடைக்கிறது. ரெட்மி கே 20 ப்ரோவை அமேசான் மூலம் 12 மாதங்கள் வரை நோகோஸ்ட் இஎம்ஐ கட்டண விருப்பத்தில் வாங்கலாம்.

ரெட்மி கே 20

ரெட்மி கே 20

ரெட்மி கே 20 பாப்-அப் செல்பி கேமரா சென்சார் மற்றும் பல்வேறு குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் இஎம்ஐ விருப்பங்களில் கிடைக்கின்றன.

போகோ எஃப் 1

போகோ எஃப் 1

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றான போகோ எஃப் 1 ஸ்னாப்டிராகன் 854 SoC ஆல் இயக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் வாங்கும்போது அமேசான் 10% வரை தள்ளுபடியை வழங்குகிறது.

ரெட்மி நோட் 9 ப்ரோ

ரெட்மி நோட் 9 ப்ரோ

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்னாப்டிராகன் 720 ஜி SoC உடன் 48MP குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,020 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. 5020 mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அடுத்த ஜூன் 2 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. அமேசான் இந்த சாதனத்திற்கு அட்டகாச சலுகைகளை வழங்குகிறது.

WhatsApp பயனர்களே உஷார்! வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க!WhatsApp பயனர்களே உஷார்! வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க!

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் என்பது ஸ்மார்ட்போன் நோட் 9 ப்ரோவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்புறத்தில் 64 எம்.பி குவாட் கேமரா அமைப்பு, 32 எம்.பி இன் டிஸ்ப்ளே செல்பி கேமரா சென்சாரோடு வருகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவற்றுடன் இந்த ஸ்மார்ட்போனின் மூன்றாவது விற்பனை அடுத்த வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்த ஸ்மார்ட்போனை கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Amazon announced best discounts for xiaomi smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X