அமேசான் அறிமுகப்படுத்தும் புதிய "ஐஸ்" ஸ்மார்ட்போன்கள் .!

Written By:

அமேசான் தனது சொந்த பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த மொபைல்போன் விற்ப்பனையில் பல லாபாங்கள் பெறமுடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய சந்தைகளில் அதிக கவனம் செலுத்துகிறது, ஃபயர் போனைப் போலல்லாமல் - அதன் புதிய தொலைபேசிகளை விற்பனை செய்வதற்காக இந்தியா போன்ற வளர்ந்துவரும் சந்தைகளை அந்நிறுவனம் தற்போது கவனித்து வருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அமேசான் :

அமேசான் :

அமேசான் ஸ்மார்ட்போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பை கூகிள் மொபைல் சேவைகளுடன் (ஜிஎம்எஸ்) ஜிமெயில் மற்றும் கூகிள் ப்ளே போன்றவற்றுடன் இயங்குகின்றன, அஇவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. தற்போது தற்போது கூகுள் பயன்பாடுகளில் இல்லாத ஆண்ட்ராய்டு டேப்லெட்களை வழங்குகிறது அமேசான் நிறுவனம்.

ஐஸ்' ஸ்மார்ட்போன் :

ஐஸ்' ஸ்மார்ட்போன் :

தற்போது அமேசான் அறிமுகப்படுத்திய 'ஐஸ்' ஸ்மார்ட்போன் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, மேலும் இவற்றில் பொருத்தப்பட்டுள்ள மென்பொருள் தொழில்நுட்பம் தனித்தன்மை கொண்டவை எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு அமேசான் இந்தியாவில் குறைந்தது ஒரு ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.

 கேமரா:

கேமரா:

"ஐஸ்" ஸ்மார்ட்போன் பொருத்தவரை ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும் 16 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 62 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

"ஐஸ்" ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்ராகன் 435 எஸ்ஒசி,ஆண்ட்ராய்டு7.1.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

 விலை:

விலை:

இதன் விலை பொருத்தவரை ரூ 6,000 இருக்கும் எனக் கூறப்படுகிறது, மேலும் இவை இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Amazon Aims to Put Fire Phone Nightmare Behind With 'Ice' Smartphones: Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot