Home
Mobile

பட்ஜெட் விலையில் கிடைக்கும் லேட்டஸ்ட் 5G ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

இந்தியாவில் பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. அதுவும் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இப்போது அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள் அதிநவீன சிப்செட் மற்றும் மேம்பட்ட கேமிங் அம்சங்களை வழங்குகிறது என்றே கூறலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பட்ஜெட் விலையில் கிடைக்கும் லேட்டஸ்ட் 5G ஸ்மார்ட்போன்கள்.!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி: சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போனை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.72-இன்ச் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், 108எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

போக்கோ எக்ஸ்5 5ஜி: 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போக்கோ எக்ஸ்5 5ஜி போனை ரூ.17,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.67-இன்ச் டிஸ்பிளே, 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்5 5ஜி போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி: 6ஜிபி ரேம் மற்றும 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போனை ரூ.18,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர ஆக்டோ-கோர் பிராசஸர், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 13எம்பி செல்பி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

மோட்டோ ஜி71 5ஜி: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.17,979 விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி, 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

விவோ டி2 5ஜி: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.18,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் 64எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 6.38-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 4500 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 12 5ஜி: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.67-இன்ச் டிஸ்பிளே, 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 13எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் உள்ளிட்ட அசத்தலான அம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 12 5ஜி போன் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazing New 5G Smartphones Under Rs 20,000: Here's The List!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X