ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை இப்படியும் பயன்படுத்தலாம், நம்புங்க பாஸ்..
உலகில் பெரும்பாலானோர் அதிகமாக பயன்படுத்தும் இயங்குதளமாக ஆன்டிராய்டு விளங்குகின்றது. இந்த இயங்குதளம் பயன்படுத்த எளிமையாகவும் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற விலையிலும் கிடை்கின்றது.
இன்று ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியிருக்கின்றது, அந்த வகையில் இங்கு ஆன்டிராய்டு இயங்குதளத்தினை பயன்படுத்தும் சில வழிமுறைகளை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.
இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் அம்சங்களை நீங்கள் இதற்கு முன் பயன்படுத்தி இருக்க வாய்ப்புகள் குறைவே, கீழ் வரும் ஸ்லைடர்களில் பயனுள்ள ஆன்டிராய்டு வழிமுறைகளை பாருங்கள்..

ஈரீடர்
இணையத்தில் புத்தகங்களை வாசிக் வேண்டும் ஆனால் ஈரீடர் வாங்க முடியவில்லை, கவலை வேண்டாம் ஆன்டிராய்டில் இருக்கும் சில இலவச அப்ளிகேஷன்கள் புத்தகங்களை ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் கருவிகளில் பயன்படுத்த வழி வகுக்கின்றது.

வெப்கேம்
உங்களது வெப்கேமராவில் ஆப்ஷன்கள் குறைவாக இருக்கின்றதா, ஐபி வெப்கேம் எனும் அப்ளிகேஷன் மூலம் இந்த குறையை பூர்த்தி செய்து கொள்ளலாம். இதுவும் இலவசமாக கிடைக்கின்றது, மேலும் பயன்படுத்தவும் எளிமையாக இருக்கின்றது.

ஃபிட்னஸ் டிராக்கர்
ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களில் கூகுள் ஃபிட் செயலியை இன்ஸ்டால் செய்து தினமும் எத்தனை தூரம் நடக்கின்றீர்கள் என்பதையும் உடல் ஆரோக்கியத்தையும் காக்க முடியும்.

ரேடியோ
என்ன தான் உங்களது ஸ்மார்ட்போனில் ரேடியோ அப்ளிகேஷன் இருந்தாலும், ட்யூன்இன் ரேடியோ அப்ளிகேஷன் மூலம் உள்ளூர் சேனல்களோடு உலகம் முழுவதிலும் இருக்கும் பல சேனல்களை கேட்க முடியும்.

ரிமோட் கன்ட்ரோல்
ஆன்டிராய்டு கருவிகளுக்காக பல ரிமோட் கன்ட்ரோல் ஆப்ஸ் கிடைக்கின்றது, உங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப செயலிளை தேர்வு செய்து கொள்ளலாம்.

வேர்டு பிராசஸர்
இந்த அம்சம் டேப்ளெட் கருவிகளில் பயன்படுத்த அனுமதிக்கின்றது. இதை ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தலாம் ஆனால் அதன் ஸ்கிரீன் மிகவும் சிறியதாக இருக்கும்.

கேமரா
டிஎஸ்எல்ஆர் கேமராவினை ஆன்டிராய்டு கருவியுடன் இணைத்து கேமராவை போன் மூலம் இயக்க முடியும்.

ஜிபிஎஸ்
ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை ஜிபிஎஸ் டிராக்கிங் கருவியாக பயன்படுத்த முடியும். ஆனால் இது சட்டப்படி குற்றமாகும்.

பாதுகாப்பு கேமரா
ஆன்டிராய்டு கேமராக்களை பாதுகாப்பு கேமராக்களை போன்றும் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications