"வாவ்வ்வ்" சொல்ல வைக்கும் நோக்கியா பி1 கான்செப்ட் (விடியோவுடன்).!

"எப்போடா அறிமுகம் ஆகும்.. எப்போடா நோக்கியா பி1 ஸ்மார்ட்போனை வாங்குவோம்" என்ற ஆர்வத்தை கிளப்பும் கான்செப்ட் வீடியோ.!

|

வரும் நாட்களில், நாம் நிறைய நோக்கியா கருவிகளை சந்திக்கவுள்ளோம் என்பதில் ஒரு சந்தேகமும் வேண்டாம். நமக்கிருக்கும் ஒரே சந்தேகம் என்னவெனில் வரவிருக்கும் நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் எம்மாதிரியான அம்சங்கள் கொண்டிருக்கும், எப்படி இருக்கும் என்பது மட்டுமே.

அந்த சந்தேகத்திற்கு 'முரட்டு தீனி' போட லீக்ஸ் மற்றும் கான்செப்ட் தகவல்கள் ஒருபோதும் தவறியதில்லை.!

நோக்கியா பி1 மற்றும் நோக்கியா 8 என எதிர்வரும் இரண்டு நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும் மிகவும் எதிர்பார்க்கப்படும் கருவிகள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில உள்ளன. முக்கியமாக பட்ஜெட் கருவியாக அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுக்கிறது. அந்த எதிர்பார்ப்புகளை மேலும் தூண்டி விடும் வண்ணம் வெளியாகியுள்ளது ஒரு நோக்கியா பி1 கான்செப்ட் வீடியோ.!

நோக்கியா பி1

நோக்கியா பி1

"எப்போடா அறிமுகம் ஆகும்.. எப்போடா நோக்கியா பி1 ஸ்மார்ட்போனை வாங்குவோம்" என்ற ஆர்வத்தை கிளப்பும் கான்செப்ட் வீடியோ மூலம் நமக்கு கிடைத்த தகவல்கள் (வீடியோ இணைப்புடன்) பற்றிய விரிவான தொகுப்பே இது.!

வடிவமைப்பு

வடிவமைப்பு

வெளியான லீக் தகவலில் இருந்து நோக்கியா பி1 ஒரு உலோக மற்றும் கண்ணாடி வடிவமைப்பு கொண்ட மற்றும் கேமரா அர்ப்பணிப்பு கொண்ட கருவியாக வெளியாகலாம்.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

உடன் லீக்ஸ் வீடியோ மூலம் இக்கருவி கைரேகை சென்சார் மற்றும் ஹோம் பட்டன் ஆகிய இரண்டையும் ஒரே பொத்தானில் நிகழ்த்தும் என்பது போலும் காட்டுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

நோக்கியா பி1 கருவியானது கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு கொண்ட ஒரு 5.3 அங்குல இக்ஸோ (IGZO) டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

செயலி

செயலி

உடன் ஸ்னாப்டிராகன் 835 செயலி மூலம் இயங்கும் என்கிறது வெளியான லீக் வீடியோ. மற்றும் ஸ்மார்ட்போன் ஐபி55 அல்லது ஐபி57 சான்றிதழ் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சேமிப்பு

சேமிப்பு

6ஜிபி ரேம் கொண்டு 128ஜிபி அல்லது 256ஜிபி என்ற சேமிப்பு விருப்பம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கேமிரா

கேமிரா

நோக்கியா பி1 ஒரு கேமரா முன்னுரிமை கொண்ட சாதனமாக இருக்க அதிக வாய்ப்புண்டு. கசிவின் அடிப்படையில் இந்த கருவி ஒரு பிரத்யேக ஷட்டர் விசை கொண்ட கார்ல் ஜெய்ஸ் லென்ஸ் கொண்ட ஒரு 22.3எம்பி பின்புற கேமிரா கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

பேட்டரி,  ஆண்ட்ராய்டு

பேட்டரி, ஆண்ட்ராய்டு

நோக்கியா பி1 கருவியானது 3500எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டு ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம் இயங்கலாம்.

விலை

விலை

விலை சார்ந்த விவரங்களை பொறுத்தம்மட்டில் நோக்கியா பி1 கருவியின் 128ஜிபி மாதிரி மற்றும் 256ஜிபி மாதிரி முறையே சுமார் 800 அமெரிக்க டாலர்கள் மற்றும் 950 அமெரிக்க டாலர்கள் என்ற விலைக்கு விற்கப்படலாம்.

வீடியோ

இதோ வெளியான நோக்கியா பி1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கான்செப்ட் வீடியோ.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

மெய்சிலிர்க்க வைக்கும் நோக்கியா 8 கான்செப்ட் (விடியோவுடன்).!

Best Mobiles in India

Read more about:
English summary
Alluring Nokia P1 video surface online. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X