Home
Mobile

அடுத்த ரெட்மீ ரிலீஸ்: நோக்கியா; ஆப்பிள்; சாம்சங் என யாராலும் தடுக்க முடியாத சியோமி.!

எல்இடி ஃப்ளாஷ் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. மறுபக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

By Muthuraj

சூப்பர் பட்ஜெட் முதல் ஹை-எண்ட் வரையிலாக, யார் எந்தவொரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தாலும் தான் உண்டு தன் தொடர்ச்சியான தயாரிப்புகள் உண்டென பணியாற்றும் நிறுவனங்களில் சியோமிக்கு ஒரு குறிப்பிட்ட இடமுண்டு, அதிலும் குறிப்பாக அதன் ரெட்மீ வரிசை கருவிகளுக்கு.!

அடுத்த ரெட்மீ ரிலீஸ்: யாராலும் தடுக்க முடியாத சியோமி.!

என்னதான் "ஐயர்ன் பாக்ஸ்" என்று ரெட்மீ கருவிகளை நெட்டிசன்கள் கலாய்த்தாலும் கூட இந்திய சந்தையில் ஒரு பிராதன இடத்தை தக்கவைத்துக்கொண்டே வரும் ரெட்மீ தொடர் கருவியில் மேலுமொரு கருவி இணைகிறது.

அனைத்து தேவையான ஒப்புதல்கள்.!

அனைத்து தேவையான ஒப்புதல்கள்.!

சியோமி நிறுவனம் விரைவில் அமெரிக்காவில் அதன் ரெட்மீ நோட் 5ஏ ப்ரைம் ஸ்மார்ட்போனை வெளியீ தயாராக உள்ளது போல் தெரிகிறது. வெளியான அறிக்கைகளின் படி இந்த சாதனம், சர்வதேச தகவல்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனின் (FCC) அனைத்து தேவையான ஒப்புதலையும் பெற்றுவிட்டது.

மேலுமொரு சியோமி ரெட்மீ

மேலுமொரு சியோமி ரெட்மீ

சமீபத்தில் சீனாவில் வெளியான நுழைவு நிலை சாதனமான ரெட்மீ நோட் 5ஏ ஸ்மார்ட்போனை தொடர்ந்து தற்போது மேலுமொரு சியோமி ரெட்மீ நோட் 5ஏ மாறுபாடு வெளியாகவுள்ளதை எப்சிசி ஆவணம் சுட்டிக்காட்டியுள்ளது.

ரெட்மீ நோட் 5ஏ ப்ரைம் அல்லது ரெட்மீ நோட் 5ஏ ப்ளஸ்

ரெட்மீ நோட் 5ஏ ப்ரைம் அல்லது ரெட்மீ நோட் 5ஏ ப்ளஸ்

கூரப்பப்டும் இந்த புதிய சாதனம் மாடல் எண் எம்டிஜி6எஸ் என்ற பெயரின்கீழ் காணப்பட்டுள்ளதகு மற்றும் அக்கருவி சியோமி ரெட்மீ நோட் 5ஏ சாதனத்தின் ஒரு புதிய மாறுபாடு என்று கூறப்படுகிறது. அதாவது ரெட்மீ நோட் 5ஏ ப்ரைம் ஸ்மார்ட்போனாக இருக்கலாம்.

வளைந்த விளிம்பு

வளைந்த விளிம்பு

ரெட்மீ நோட் 5ஏ ப்ரைம் அல்லது ரெட்மீ நோட் 5ஏ ப்ளஸ் என்ற பெயரில் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படும் இக்கருவி வளைந்த விளிம்புகளுடன், ஒரு உலோக வடிவமைப்பை கொண்டிருக்கலாம் என எப்சிசி ஆவணம் தெரிவிக்கிறது.

வட்டமான கைரேகை ஸ்கேனர்

வட்டமான கைரேகை ஸ்கேனர்

மேலும் இக்கருவி அதன் பின்புறத்தில் ஒரு வட்டமான கைரேகை ஸ்கேனரையும் மற்றும் கீழ் பகுதியில் இரு ஸ்பீக்கர்களையும் கொண்டிருக்கலாம்.

ஒற்றை கேமரா

ஒற்றை கேமரா

மேலும் எல்ஈடி பிளாஷ் உடனான ஒற்றை கேமரா அதன் இடது மூலையில் இடம்பெறலாம். கூறப்படும் ரெட்மீ நோட் 54ஏ ப்ரைம் ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் அதன் வால்யூம் மற்றும் பவர் பொத்தான் இடம்பெற, அதன் மேல் பக்கத்தில் ஒரு 3.5மிமீ ஹெட்ஜாக் உள்ளது.

256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64 ஜிபி

256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64 ஜிபி

முந்தைய வதந்திகள் படி, ரெட்மீ நோட் 5ஏ ப்ரைம் ஆனது ஒரு 5.5 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 435, 4ஜிபி ரேம், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழியாக உள்ளடக்க நினைவகம் ஆகிய பிரதான அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கும்.

16 மெகாபிக்சல் செல்பீ கேமரா

16 மெகாபிக்சல் செல்பீ கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி ஃப்ளாஷ் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. மறுபக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது. ஒரு 3080எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Alleged Xiaomi Redmi Note 5A Prime receives FCC certification. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X