டபுள் சர்ப்ரைஸ்.! டூயல் கேராவுடன் வெளியாகிறது ரெட்மீ நோட் 5.?!

|

சியோமி நிறுவனம், அதன் ரெட்மீ நோட் 5 உட்பட சில பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணியில் மும்மரமாக இருப்பதை நாம் அறிவோம். ஆனால் என்னென்ன கருவிகள் வெளியாகும் மற்றும் அவைகள் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் போன்ற விவரங்களில் சிறிய குழப்பம் நிலவினாலும் அவ்வப்போது வெளியாகும் லீக்ஸ் தகவல்களுக்கு எந்தக்குறையும் இல்லை.

டபுள் சர்ப்ரைஸ்.! டூயல் கேராவுடன் வெளியாகிறது ரெட்மீ நோட் 5.?!

அப்படியாக தற்போது வெளியாகியுள்ள சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் ரியர் பேனல் லீக் புகைப்படமொன்று அந்த கருவியிலிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

அதே வரவேற்பை பெறும்.!

அதே வரவேற்பை பெறும்.!

ரெட்மீ நோட் 4 சாதனத்தின் வெற்றியை தொடர்ந்து, அந்த வரிசையில் வெளியாகும் சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனும் இந்திய சந்தையில் அதன் ஆகப்பெரும் வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கபப்டுகிறது. அதை நிரூபிக்கும் வண்ணம் தற்போது கிஸ்மோசீனா வலைத்தளம் வழியாக ஒரு புகைப்படம் கசிந்துள்ளது.

செங்குத்தான இரட்டை கேமரா அமைப்பு

செங்குத்தான இரட்டை கேமரா அமைப்பு

வெளியான புகைப்படத்திலிருந்து, எதிர்வரும் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம் தெளிவாக காட்சிப்படுகிறது. அதில் எல்இடி ப்ளாஷ் கொண்ட செங்குத்தான இரட்டை கேமரா அமைப்பு இருப்பது போல் தெரிகிறது மற்றும் அதன் கீழே கைரேகை சென்சார் ஒன்றும் இடம்பெறுகிறது.

பாதுகாப்பான பேக் கவர்

பாதுகாப்பான பேக் கவர்

இந்த லீக்ஸ் புகைப்படம் அதிகாரப்பூரவமான ஒன்றல்ல என்பது ஒருபக்கம் இருப்பினும் இது ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போஜின் இறுதி வடிவமைப்பாகவும் இருக்க வாய்ப்புள்ளது. வெளியான புகைப்படத்தில் சாதனம் ஒரு பாதுகாப்பான பேக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளது என்பதால் அதன் மி லோகோ காணப்படுவதற்கில்லை.

16எம்பி அளவிலான கேமாரா

16எம்பி அளவிலான கேமாரா

இரட்டை கேமரா அமைப்பு காணப்படுவதால் இதன் முதன்மை சென்சார் ஒரு 16எம்பி அளவிலான கேமாராவாக இருக்க அதிக வாய்ப்புள்ளது மற்றும் அதன் இரண்டாம் சென்சார் ஒரு 5எம்பி கேமராவாக இருக்கலாம் என்று யூகங்கள் உள்ளன.

ஒன்று மட்டும் உறுதி

ஒன்று மட்டும் உறுதி

இவை தவிர, ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா சார்ந்த விவரங்கள் எதுவும் இப்போது அறியப்படவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி, வெளியான லீக்ஸ் புகைப்படத்தில் இருப்பது மலிவு விலை சாதனமான ரெட்மீ நோட் 5ஏ அல்ல ஏனெனில் இது ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது, நுழைவு நிலை சாதனத்தில் இந்த அம்சம் சாத்தியம் இல்லை.

Best Mobiles in India

English summary
Alleged Xiaomi Redmi Note 5 rear panel leaks showing dual cameras. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X