ரெடியாகும் ரெட்மீ 5 ப்ளஸ் & ரெட்மீ நோட் 5 : நீங்களும் ரெடியாகி கொள்ளுங்கள்.!
இந்த ஸ்மார்ட்போன் 8 மெகாபிக்சல் என்ற ரியர் மற்றும் 6 மெகாபிக்சல் என்ற முன்பக்க கேமராவை கொண்டிருக்கலாம்.
வருகிற நவம்பர் 11-ஆம் தேதியன்று சியோமி ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பதுபோல் தெரிகிறது. இதுவரை வெளியான தகவல்களும் அதை உறுதிப்படுத்துகின்றன.

அதாவது சியோமி நிறுவனம் வருகிற 11-ஆம் தேதியன்று மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, - ரெட்மீ 5, ரெட்மீ 5 ப்ளஸ் மற்றும் ரெட்மீ நோட் 5 ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

இரண்டு சியோமி ஸ்மார்ட்போன்கள்
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றி ஏற்கனவே பல்வேறு லீக்ஸ் தகவல்கள் தோன்றியுள்ளன. இப்போது மாதிரி எண் எம்டிடி1 மற்றும் எம்டிஇ1 என்ற பெயரின்கீழ் இரண்டு சியோமி ஸ்மார்ட்போன்கள் சீனாவின் தரச்சான்றிதழ் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மீ 5 வகையாக இருக்கலாம்
இந்த சாதனங்கள் சியோமி ரெட்மீ 5 வகையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பட்டியல் முதலில் மைடிரைவர்ஸ் மூலம் மற்றும் கிஸ்மோசீனா வழியாக காணப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. இந்த லீக்ஸ் தகவலின் சுவாரசியம் என்னவெனில் அம்சங்களுடன் சேர்த்து கூறப்படும் கருவிகளின் விலைநிர்ணயமும் வெளிப்பட்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்
இந்த 3சி சான்றிதழ் மூலம் அதிகபப்டியான அம்சங்கள் வெளிவிடவில்லை என்றாலும் கூட, சியோமி ரெட்மீ 5 வகைகள் 5வி / 2ஏ பாஸ்ட் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்துடன் இயங்குவதாகவும், சீனாவில் உள்ள அனைத்து கேரியர்களுடனும் ஒற்றுப்போவதாகவும் சான்றிதழ் தெரிவித்துள்ளது.

ரெட்மீ 5
இதர அம்சங்களை பொறுத்தமட்டில், எச்டி ரெசல்யூஷன் 720 x 1280 பிக்சல்கள் மற்றும் 18: 9 விகிதத்திலான 5.7 இன்ச் டிஸ்ப்ளேவை ரெட்மீ 5 கொண்டிருக்கலாம். மேலும் இது க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 450 செயலி மூலம் இயக்கப்படுகிறது. கேமராவை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் 8 மெகாபிக்சல் என்ற ரியர் மற்றும் 6 மெகாபிக்சல் என்ற முன்பக்க கேமராவை கொண்டிருக்கலாம்.

ரெட்மி 5 ப்ளஸ்
மறுகையில் உள்ள ரெட்மி 5 ப்ளஸ் ஆனது ஒரு 5.7 அங்குல முழு டிஸ்பிளே கொண்டு வரலாம் மற்றும் இதன் கேமராத்துறையை பொறுத்தமட்டில், இதில் 13 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு இடம்பெறலாம்.

விலைப்புள்ளி
இக்கருவிகள் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், ரெட்மீ 5 ப்ளஸ் ஆனது 999 யுவான் (அதாவது 151 அமெரிக்க டாலர்கள்) என்ற விலைப்புள்ளியையும், ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 3 ஜிபி ரேம் ஆனது 799 யுவான் என்ற புள்ளியையும் மற்றும் அதன் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பானது 899 யுவான் (அதாவது 136 அமெரிக்க டாலர்கள்) என்ற புள்ளியை அடையலாம்.


Click it and Unblock the Notifications