ஆரம்பம்: சியோமியின் புதிய 'ஆர்' தொடர் ஸ்மார்ட்போன்கள்; இதோ சியோமி ஆர்1.!

Written By:

சமீபத்தில், முழு திரை வடிவமைப்பு கொண்ட ஒரு மர்மமான சியோமி ஸ்மார்ட்போனின் புகைப்படம் ஆன்லைனில் வெளியானது. இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இது வரவிருக்கும் சியோமி ஆர்1 ஸ்மார்ட்போனாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

கிஸ்மோசீனா மூலம் இணையத்தில் கசிந்த இந்த சியோமி ஆர்1 ஸ்மார்ட்போனின் இரண்டு புதிய படங்களின் வழியாக சியோமி நிறுவனம் அதன் புதிய "ஆர்" தொடர் ஸ்மார்ட்போன்களை மிக விரைவில் அறிமுகம் செய்யும் என்பது உறுதியாகியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மிகவும் தெளிவான சியோமி ஆர்1 படங்கள்

மிகவும் தெளிவான சியோமி ஆர்1 படங்கள்

கசிந்த படங்களில் ஒரு முழுமையான திரை கொண்ட சாதனம் வெளிப்படுகிறது. இதுவரை கிடைக்கப்பெற்ற புகைப்படங்களிலேயே இதுதான் மிகவும் தெளிவான சியோமி ஆர்1 படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3.5மிமீ ஆடியோ ஜாக்

3.5மிமீ ஆடியோ ஜாக்

சியோமி ஆர்1 கருவியின் மேல்பக்கம் ஒரு 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளது மற்றும் கீழே இரண்டு ஸ்பீக்கர் கிரில் இடையே வைக்கப்பட்ட ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட்டை பார்க்க முடிகிறது. மேலும் பின்புற உட்பொதிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தோராயமாக ரூ 14,600/-

தோராயமாக ரூ 14,600/-

சியோமி ஆர்1 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு விவரங்களைத் தவிர, முக்கிய அம்சங்கள் மற்றும் வெளியீட்டு விபரங்கள் எதுவும் இப்போது வரை தெரியாது. இந்த சாதனத்தின் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் 1,499 யுவான் (தோராயமாக ரூ 14,600) என்ற புள்ளியை எட்டலாம். இன்னும் ஒரு மலிவு ஸ்மார்ட்போனாக வெளியாகவும் வாய்ப்புகள் உண்டு.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில்

சியோமி நிறுவனத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு முழு திரை வடிவமைப்புடன் வெளியாக வாய்ப்புள்ளது. ஆக சியோமி ஆர்1 ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்படலாம்.

கர்வுடு கிளாஸ் டிஸ்பிளே.!

கர்வுடு கிளாஸ் டிஸ்பிளே.!

முன்னர் வெளியான கசிவிகளின்படி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், டிஇஎன்ஏஏ பட்டியலின் படி, வரவிருக்கும் இக்கருவி ஒரு 18: 9 விகிதம் கொண்ட டிஸ்பிளே கொண்டிருக்கும். ஆக, ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ அளவிலான 2.5டி கர்வுடு கிளாஸ் டிஸ்பிளே கொண்டிருக்கும்.

எட்டு-நாள் ஆயுள் நீடிக்கும் பேட்டரி.!

எட்டு-நாள் ஆயுள் நீடிக்கும் பேட்டரி.!

எம்இடி7/எம்இஇ எனும் குறியீட்டு பெயர்களுடன் சீன தரச்சான்றிதழ் ஆணையமான டிஇஎன்ஏஏ வலைத்தளத்தில் காணப்பட்ட இக்கருவி ஒரு பெரிய அளவிலான பேட்டரியை கொண்டுவருமென அதாவது நோக்கியா கருவிகளை போல கிட்டத்தட்ட 'எட்டு-நாள் ஆயுள்' நீடிக்கும் பேட்டரி கொண்டிருக்கும் என்று வெளிப்பட்ட ரெட்மே 5ஏ-வில் இருப்பது போன்றே ஒரு பெரிய அளவிலான பேட்டரி கொண்டுவரலாம்.!

இரண்டு வகைகளில்.!

இரண்டு வகைகளில்.!

ஒரு ஆக்டா-கோர் செயலி கொண்டு இயங்கும் இக்கருவி இரண்டு வகைகளில் வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது: 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு.

ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்.!

ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்.!

துரதிர்ஷ்டவசமாக, கருவியின் சிப்செட் பற்றிய எந்த வார்த்தையும் இல்லை, ஆனால் வதந்திகள் இது க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 600 தொடர் எஸ்ஓசி கொண்டிருக்கலாமென பரிந்துரைக்கின்றன. மியூஐ 9 கொண்டு இயங்கும் இக்கருவி பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் அடிப்படையில் இயக்கப்படலாம்.

12 மெகாபிக்சல் கேமரா.!

12 மெகாபிக்சல் கேமரா.!

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்தை (128 ஜிபி வரை) ஆதரிக்கிறது. மேலும் கலப்பு சிம் ஸ்லாட்டையும் ஆதரிக்கிறது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், செல்பீக்களுக்கான ஒரு 5 மெகாபிக்சல் கேமராவுடன் இணைந்து பின்பக்கம் ஒரு 12 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்குமென கூறப்படுகிறது.

4000எம்ஏஎச் பேட்டரி.!

4000எம்ஏஎச் பேட்டரி.!

மேலும் இந்த ரெட்மீ நோட் 5 ஆனது ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கலாமென பட்டியல் அறிவிக்கிறது. இது ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனின் 4100எம்ஏஎச் பேட்டரியை விட சற்று சிறியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கைரேகை ஸ்கேனர்.!

கைரேகை ஸ்கேனர்.!

மேலும் வெளியான தகவல்களின் கீழ் இக்கருவி அதன் பின்புறத்தில் ஒரு கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது. மற்றும் லீக்ஸ் புகைப்படங்களில் கூறப்படும் உருண்டையான மூலைகளும் வடிவமைப்பில் எதிர்நோக்கப்படுகிறது. அளவீட்டில் இந்த கைபேசியில் 158.5x75.4x8 மிமீ மற்றும் 180 கிராம் எடையுள்ளதாக இருக்குமென பட்டியல் குறிப்பிடுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Alleged Xiaomi R1 surfaces online, reveals bezel-less display. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot