மி மிக்ஸ் 3: சியோமி நினைத்தால் முடியாததென்று ஒன்று உண்டோ.!

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை மிகவும் வெளிப்படையாக ஆளும், சியோமி நிறுவனம் ஒரு சில மாதங்களுக்கு முன்பு அதன் மி மிக்ஸ் பஹாப்ளெட் வரிசை கருவிகளை அறிமுகம் செய்ய தொடங்கியது.

மி மிக்ஸ் 3: சியோமி நினைத்தால் முடியாததென்று ஒன்று உண்டோ.!

ஆனால், அதற்குள் அதன் மூன்றாவது மாடல் ஏற்கனவே தயாராகிவிட்டதுபோல தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள ஒரு லீக்ஸ் தகவலில் கூறப்படும் சியோமி மி மிக்ஸ் 3 சாதனத்தின் பின்புற பேனல் புகைப்படமொன்று வெளியாகியுள்ளது. இக்கருவி மி மிக்ஸ் 2எஸ் என்ற பெயரில் கூட அறிமுகமாகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டுமொரு முறை சியோமி நிரூபித்துள்ளது

மீண்டுமொரு முறை சியோமி நிரூபித்துள்ளது

சியோமி நிறுவனம் வருகிற 2018-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மேலுமொரு மி மிக்ஸ் ஸ்மார்ட்போனை துவங்கப்போகிறது என்பதை நம்புவது கடினம்தான். ஆனால், நமக்கு வேறுவழி இல்லை. ஸ்மார்ட்போன் துறையில் எதுவும் சாத்தியமே என்பதை மீண்டுமொரு முறை சியோமி நிரூபித்துள்ளது.

தொடரின் பிரீமியம் சாதனமாக திகழும்.

தொடரின் பிரீமியம் சாதனமாக திகழும்.

கசிந்த படத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை, இருப்பினும் சில சுவாரசியமான அம்சங்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த புகைப்படம் உண்மையானால், கூறப்படும் மி மிக்ஸ் 3 ஆனது மி மிக்ஸ் தொடரின் பிரீமியம் சாதனமாக திகழும்.

டூயல் கேமரா அமைப்பு

டூயல் கேமரா அமைப்பு

குறிப்பாக, மி மிக்ஸ் குடும்பத்தில் இரட்டை லென்ஸ் அமைப்பு கொண்டுவரும் முதல் பஹாப்ளெட் ஆகவும் இது திகழும். மி மிக்ஸ் 2 ஆனது ஒற்றை கேமராவை மையமாகக் கொண்டது. ஆனால் கூறப்படும் மி மிக்ஸ் 3 ஆனது டூயல் கேமரா அமைப்பை அதன் இடது மேல் மூலையில் வைக்கின்றது.

மி 7 ஸ்மார்ட்போன் மீதும் அதிக கவனம்

மி 7 ஸ்மார்ட்போன் மீதும் அதிக கவனம்

கேமரா அமைப்பின் பின்புறம் நடுவில் கைரேகை சென்சார் தனிமைப்படுத்தப்பட்டதாக அமைந்துள்ளது. மறுகையில், சியோமி நிறுவனம் அதன் மி 7 ஸ்மார்ட்போன் மீதும் அதிக கவனம் செலுத்துகிறது. இக்கருவி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 845 ப்ராசசர்

ஸ்னாப்டிராகன் 845 ப்ராசசர்

எனவே சீன நிறுவனத்திலிருந்து வரும் மற்றொரு உயர்இறுதி தயாரிப்பும் உறுதி செய்யப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம், சியோமி மி 7 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 ப்ராசசர் கொண்டு களமிறங்கும் முதற்கட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக திகளுமென நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜூன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Alleged Xiaomi Mi Mix 3 back panel confirms rear-mounted fingerprint, dual camera. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X