டூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி 6எக்ஸ்.!

சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதியுடன், இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஷ் ஆதரவு உள்ளது மேலும் இதனுடைய செல்பீ கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

By Prakash
|

சியோமி மி 6எக்ஸ் சாதனத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். செங்குத்தாக நிலைத்த இரண்டு லென்ஸ்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகத்து.

டூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி 6எக்ஸ்.!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சியோமி மி 6 ஸ்மார்ட்போன் மாடல் வெளியிடப்பட்டது, சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன்
அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 18:9 என்ற திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 5.7-இன்ச் அல்லது 5.9-இன்ச் டிஸ்பிளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி 6எக்ஸ்.!

இக்கருவி பொதுவாக மெட்டல் யுனிபாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் அட்டகாசமான கைரேகை
ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதியுடன், இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஷ் ஆதரவு உள்ளது மேலும் இதனுடைய செல்பீ கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி 6எக்ஸ்.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Alleged Xiaomi Mi 6X images leak showing 18 9 display and dual cameras

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X