Home
Mobile

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் வெளிவரும் கேலக்ஸி ஜே4.!

சாம்சங் கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது,அதன்படி ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் எஸ்எம்-ஜே400 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன் மாடல். இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன்.

 குவாட் கோர் செயலி:

குவாட் கோர் செயலி:

சாம்சங் கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன் பொதுவாக 1.43ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2ஜிபி ரேம்
மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில்:

விரைவில்:

சாம்சங் கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் எம்டபுள்யூசி 2018 -நிகழ்ச்சியில்
அதன் கேலக்ஸி எஸ்9-சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிடத் தயார் நிலையில் உள்ளது சாம்சங் நிறுவனம்.

இன்ஃபினிட்டி :

இன்ஃபினிட்டி :

கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன்களின் விளிம்பில் பல வேறுபாடுகள் காணப்படுகிறது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

இந்த இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களும் எக்ஸிநோஸ் 9810 எஸ்ஒசி கொண்டும் சில சந்தைகளில் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஒசி கொண்டும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனங்கள் வெளிவரும்.

சேமிப்பு:

சேமிப்பு:

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், அதன்பின்பு எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
பேட்டரி:

பேட்டரி:

முந்தைய தகவலின் அடிப்படையில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், டைட்டானியம் கிரே மற்றும் கோரல் ப்ளூ போன்ற நிறங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கேலக்ஸி எஸ்9 சாதனத்தில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Alleged Samsung Galaxy J4 spotted with Android 8 0 Oreo ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X