நோக்கியா 5-ஐ தூக்கி சாப்பிடும் சியோமி ரெட்மீ 6; என்னென்ன அம்சங்கள்.?

சியோமி நிறுவனத்தின் பெயரிடப்படாத - M1804C3CC, M1804C3CE மற்றும் M18 04C3DE - மாடல் எண்கள் தரசான்றிதழ் தலமான TENAA-வை கடந்துள்ளது

|

சியோமி நிறுவனத்தின் பெயரிடப்படாத - M1804C3CC, M1804C3CE மற்றும் M18 04C3DE - மாடல் எண்கள் தரசான்றிதழ் தலமான TENAA-வை கடந்துள்ளது. அவைகள் சியோமி ரெட்மீ 6ஏ ஸ்மார்ட்போனாக அல்லது ரெட்மீ 6 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 5-ஐ தூக்கி சாப்பிடும் சியோமி ரெட்மீ 6; என்னென்ன அம்சங்கள்.?

இதற்கிடையில் ஒரு பெயர் குறிப்பிடப்படாத சியோமி ஸ்மார்ட்போனின் லீக்ஸ் புகைப்படங்களும் வெளியாகியது. இந்த இரண்டை செய்திகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, விரைவில் ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் மாறுபாடுகள் வெளியாகும் என்பதை அறிய முடிகிறது. வருகிற மே 31, 2018 அன்று நடைபெறும் நிகழ்வில் நிறுவனத்தின் மி 8 ஸ்மார்ட்போன் வெளியாவது உறுதியாகிவிட்ட நிலைப்பாட்டில் அதனுடன் சேர்த்து வேறென்னே ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்பதற்கான ஒரு துணுக்காக இதை காண முடிகிறது.

டூயல் கேமரா அமைப்பு.!

டூயல் கேமரா அமைப்பு.!

வெளியான லீக்ஸ் புகைப்படத்தில் காணப்படும் ஸ்மார்ட்போன் ஆனது, நிறுவனத்தின் ரெட்மீ 5 போன்றே உருவாக்கம் மற்றும் வடிவமைப்பை கொண்டுள்ளது. குறிப்பாக டூயல் கேமரா அமைப்பு மற்றும் இமேஜிங் சென்சார்களுக்கு மத்தியில் வடிவமைக்கப்பட்டுள்ள எல்ஈடி போன்றவைகளை கூறலாம். இருப்பினும், முன் பக்கத்தை பொறுத்தவரை, ஒரு பெரிய எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே கொண்டிருக்கிறது.

முழுமையான பெஸல்.!

முழுமையான பெஸல்.!

கிட்டத்தட்ட முழுமையான பெஸல்களை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், அதன் மேல் பக்கத்தில் ஐபோன் எக்ஸ்-ல் காணப்படும் நாட்ச் வடிவமைப்பை பெற்றுள்ளது. அதில் செல்பீ கேமரா, ஸ்பீக்கர் மற்றும் மற்றும் சென்சார்கள் ஆகியவைகள் இடம்பெற்றுள்ளது. வெளியான லீக்ஸ் படத்தில், டிஸ்பிளேவின் கீழே "D1SP1-1393" என்று அச்சிடப்பட்டுள்ளதை காண முடிகிறது, இதில் இருந்து இந்த ஸ்மார்ட்போன் இன்னும் ஒரு முழுமையான வடிவமைப்பை பெறவில்லை என்பதை அறிய முடிகிறது.

பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் வெளியாகும்.!

பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் வெளியாகும்.!

வெளியான புகைப்படத்தில் இருப்பது ரெட்மீ 6 ஸ்மார்ட்போனா.? அல்லது ரெட்மீ 6 ஏ ஸ்மார்ட்போனா.? என்பது இன்னும் விவாதிக்கக்கூடிய விடயமாக இருந்தாலும் கூட, அது பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் வெளியாகும் என்பதில் சந்தேகம் வேண்டாம். பரிமாணங்களை பொறுத்தவரை, 147.4 x 71.49 x 8.3 மிமீ கொண்டிருக்கும். மற்றும் அநேகமாக எச்டி+ டிஸ்பிளே மற்றும் 1480 x 720 என்கிற அளவிலான பிக்ஸல்களை ஆதரிக்கும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
ஒப்பீட்டளவில் மிகவும் உறுதியானவையாகும்.!

ஒப்பீட்டளவில் மிகவும் உறுதியானவையாகும்.!

மேற்க்கூறப்பட்ட அனைத்தும், TENAA மற்றும் பிற சீன வலைத்தள பட்டியல்கள் ஒப்பீட்டளவில் மிகவும் உறுதியானவையாகும், இருந்தாலும் வெளியான லீக்ஸ் புகைப்படம் ஆனது போலியானதாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே ரெட்மீ 6 அல்லது 6ஏ ஸ்மார்ட்போனின் அனைத்து தகவல்களையும் லேசாக எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். இதன் அதிகாரபூர்வமான அம்சங்கள் அல்லது தகவல்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Alleged Redmi 6 or Redmi 6A Specifications Leaked in TENAA, CCC Listing; Images Surface Online. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X