மலிவான மாறுபாடாக களமிறங்கும் ஒப்போவின் "ஐபோன் எக்ஸ்".!

|

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை "ஆள்-ஆளுக்கு" கேலியான முறையில் விமர்சனம் செய்தாலும் கூட ஆப்பிளின் ஐடியாக்களை 'காப்பி' அடிப்பதை எந்தவொரு நிறுவனமும் நிறுத்திக்கொள்வதாய் தெரியவில்லை.

குறிப்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் துணிச்சலான வெளியீடாக கருதப்படும் ஐபோன் எக்ஸ் மீதான விமர்சனங்களும், புகார்களும் எக்கச்சக்கம். இருப்பினும் கூட சாம்சங் தொடங்கி இன்று ஒப்போ வரையிலாக ஐபோன் எக்ஸ் மாதிரியே காட்சியளிக்கும் கருவிகளை உருவாக்கம் செய்கின்றன என்பதே நிதர்சனம்.

ஒருபடி மேல செல்லும்

ஒருபடி மேல செல்லும்

இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் ஆனது ஸ்மார்ட்போன் துறையில் ஒரு டிரண்ட் செட்டர் என்பது உறுதியாகிறது. மறுகையில் ஒப்போ நிறுவனத்தின் ஆர்13 ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், ஆப்பிளை காப்பியடிக்க விரும்பும் இதர நிறுவனங்களை விட ஒருபடி மேல செல்லுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 90% வரை

கிட்டத்தட்ட 90% வரை

சமீபத்தில் ஆன்லைனில் கசிந்துள்ள சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போவின் ஆர்13 ஸ்மார்ட்போனின் புகைப்படங்களானது, ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை தொலைபேசியான ஐபோன் எக்ஸ் வடிவமைப்புடன் கிட்டத்தட்ட 90% வரை ஒற்றுப்போகிறது.

புல் ஸ்க்ரீன் டிஸ்பிளே

புல் ஸ்க்ரீன் டிஸ்பிளே

கிஸ்மோசீனா மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஒப்போ நிறுவனமானது கடந்த செப்டம்பர் மாதத்தில், ஒரு டிஸ்பிளே காப்புரிமையை தாக்கல் செய்திருந்தது. அதுவொரு புல் ஸ்க்ரீன் டிஸ்பிளே கொண்ட சாதனம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கசிந்த படங்களில் காட்டப்பட்டுள்ள ஆர்13 ஆனது டிஸ்பிளே காப்புரிமையுடன் மிக வினோதமான ஒற்றுமையைதான் கொண்டுள்ளது.

இரட்டை-பின்புற கேமரா அமைப்பு

இரட்டை-பின்புற கேமரா அமைப்பு

மேலும் நீளும் அறிக்கையின்படி, ஐபோன் எக்ஸ் போன்றே ஒப்போ ஆர்13 ஆனதும், ஹோம் ஸ்க்ரீனை நீக்கிவிட்டு ஒரு விர்ச்சுவல் ஹோம் பார் கொண்டிருக்கு வேண்டும் என்று கூறுகிறது. மேலும் சாதனத்தின் பின்புறம் செங்குத்தாக சீரமைக்கப்பட்ட இரட்டை-பின்புற கேமரா அமைப்பும் ஐபோன் எக்ஸ்-ல் இடம்பெற்றது போலவே உள்ளது.

ஆழம் உணர்திறன்மிக்க அம்சம்

ஆழம் உணர்திறன்மிக்க அம்சம்

வெளியான புகைப்படங்களில் காட்சிப்படவில்லை என்றாலும் கூட கூறப்படும் ஒப்போ ஆர்13 ஸ்மார்ட்போன் ஆனது ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-ல் உள்ள பேஸ் ஐடி போன்ற ஆழம் உணர்திறன்மிக்க அம்சம் இடம்பெற்றாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

கருப்பு மற்றும் வெள்ளை

கருப்பு மற்றும் வெள்ளை

வெளியான படங்களை பொறுத்தமட்டில், ஒப்போ ஆர்13 ஆனது கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் வரும் மற்றும் தொலைபேசியின் மேல் நிறுவனத்தின் அதே பாரம்பரியம் மிக்க ஒரு நியான் பச்சை நிறத்திலான ஒப்போ லோகோ இடம்பெறும். இது தவிர்த்து ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

Best Mobiles in India

English summary
Alleged Oppo R13 leaked images surface online, design looks very similar to the Apple iPhone X. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X