Home
Mobile

12+12எம்பி டூயல் ரியர் கேம் உட்பட நோக்கியாவின் ஆஹா ஓஹோ அம்சங்கள்.!

நமது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நோக்கியா 9 மீது குவியும் அதே சமயம் நோக்கியா 9 சார்ந்த தகவல்களும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.

By Muthuraj

நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது நோக்கியா 2, நோக்கியா 7 மற்றும் நோக்கியா 9 ஆகிய ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

12+12எம்பி டூயல் ரியர் கேம் உட்பட நோக்கியாவின் ஆஹா ஓஹோ அம்சங்கள்.!

இந்தியா உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்ட மறுகையில், நோக்கியா 7 ஆனது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆக நமது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நோக்கியா 9 மீது குவியும் அதே சமயம் நோக்கியா 9 சார்ந்த தகவல்களும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.

மாதிரி எண் டிஏ-1054

மாதிரி எண் டிஏ-1054

தற்போது, நோக்கியா பவர்யூசர் வழியாக வெளியாகியுள்ள ஒரு புத்தம் புதிய தகவலின் கீழ், ஒரு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் கட்டாய சான்றிதழ் ஒன்றை பெற்றுள்ளதாக வெளிப்படுத்துகிறது. டிஏ-1041 மற்றும் டிஏ-1042 என்ற மாதிரி எண்களுக்கு பிறகு சான்றிதழைப் பெற்றுள்ள மாதிரி எண் டிஏ-1054 என்ற புதிய எச்எம்டி க்ளோபல் நிறுவன சாதனமானது நிச்சயமான நோக்கியா 9 ஸ்மார்ட்போனாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

வரவிருக்கும் நோக்கியா 9 தான்

வரவிருக்கும் நோக்கியா 9 தான்

ஏனெனில் சமீபத்தில் வெளியான நோக்கியா 7 ஆனது டிஏ-1041 என்ற பெயரில் காணப்பட்டது, ஆனால் டிஏ-1042 என்ற பெயரில் காணப்பட்ட கருவி பற்றிய விவரங்கள் இல்லை. ஒருவேளை அது நோக்கியா 7 ஸ்மார்ட்போனின் மற்றொரு மாறுபாடாக இருக்க முடியும். இதிலிருந்து டிஏ-1054 என்பது வரவிருக்கும் நோக்கியா 9 தான் என்பது தெளிவாகிறது.

5.5 இன்ச் க்யூஎச்டி பெஸல்லெஸ் டிஸ்பிளே

5.5 இன்ச் க்யூஎச்டி பெஸல்லெஸ் டிஸ்பிளே

இதுவரை வெளியான கசிவுகளை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, நோக்கியா 9 ஆனது ஒரு 5.5 இன்ச் க்யூஎச்டி பெஸல்லெஸ் டிஸ்பிளே கொண்டிருக்கலாம் மற்றும் அது 1440x2560 பிக்சல்கள் என்ற அளவிலான தீர்மானம் கொண்டிருக்கலாம்.

6 அல்லது 8 ஜிபி

6 அல்லது 8 ஜிபி

தவிர இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 835 செயலி மூலம் இயக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயக்க முறைமையும் இடம்பெறலாம். கூடுதலாக, இந்த சாதனம் 64ஜிபி அல்லது 128ஜிபி என்ற உள்ளடக்க சேமிப்புடன் கூடிய 6 அல்லது 8 ஜிபி அளவிலான ரேம் உடன் வெளிவரலாம்.

இரண்டு 12 மெகாபிக்சல் இரட்டை கார்ல்- செய்ஸ் பின்புற கேமரா

இரண்டு 12 மெகாபிக்சல் இரட்டை கார்ல்- செய்ஸ் பின்புற கேமரா

மேலும் இந்த ஸ்மார்ட்போன் க்வால்காம் பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடனான ஒரு 3800எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம். கேமராத்துறையை பொறுத்தமட்டில், இரண்டு 12 மெகாபிக்சல் இரட்டை கார்ல்- செய்ஸ் பின்புற கேமரா மற்றும் செல்பீக்களுக்கான ஒரு 12 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டிருக்கலாம்.

ஐரிஸ் ஸ்கேனர்

ஐரிஸ் ஸ்கேனர்

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு கைரேகை ஸ்கேனர் இல்லையென்றாலும், ஐரிஸ் ஸ்கேனரைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நோக்கியா 9 ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 சான்றிதழைக் கொண்டிருக்கும்.

நோக்கியா 7

நோக்கியா 7

இதற்கிடையில், தற்போது இந்தியாவில் நோக்கியா 7 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் திட்டம் நிறுவவனத்திடம் இல்லை என்று கூறப்படுகிறது. "நோக்கியா 7 ஆனது சீன நுகர்வோர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே தற்போது இந்தியாவுக்கு கொண்டு வர எந்த திட்டமும் இல்லை" என்று எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி பெக்கா ராண்டலா தெரிவிதுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Alleged Nokia 9 gets cerified in China. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X