நோக்கியா வெறியர்களுக்கான சரியான "ஸ்கெட்ச்" நோக்கியா 7.!
மொத்தம் மூன்று விருப்பங்களில் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 630 எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாமென வதந்திகள் தெரிவிக்கின்றன
எச்எம்டி க்ளோபல் நிறுவனம் சீனாவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது நாளை (அக்டோபர் 19) நிறுவனம் மூலம் பெயர் குறிப்பிடப்படாத சாதனம் ஒன்று வெளியாகலாம்.

அந்த சாதனம் நோக்கியா 7 ஸ்மார்ட்போனாக இருக்கலாமென பலர் ஊகிக்கின்றனர். அதனை தொடர்ந்து வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் ஸ்கெட்ச் ஒன்று ஆன்லைனில் கசிந்துள்ளது, அது சில முக்கிய வடிவமைப்பு மொழிகளை வெளிப்படுத்துகிறது.
ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போதுள்ள மற்ற நோக்கியா-பிராண்டட் ஸ்மார்ட்போன்கள் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ள அக்கருவி அதன் மேல் பக்கம் இயர்பீஸ் மற்றும் நோக்கியா சின்னம் உடன் இணைந்த ஒரு முன் எதிர்கொள்ளும் கேமரா தொகுதி ஆகியவைகளை காட்சிப்படுத்துகிறது.
கீழ் பகுதியில் பிஸிக்கல் நேவிகேஷன் பொத்தான்கள் உள்ளன. வலதுபுறத்தில், வால்யூம் கட்டுப்பாடுகள் மற்றும் பவர் பொத்தான் இடம்பெறுகிறது. பின்புல பலகையில், எல்இடி ப்ளாஷ் உடனான செய்ஸ் பிராண்ட்டிங் லென்ஸ் கொண்ட ஒரு முதன்மை கேமரா உள்ளது, அதன் கீழ் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் கூறப்படும் நோக்கியா 7 ஆனது 3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள் சேமிப்பு, 4 ஜிபி ரேம் + 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி உள் சேமிப்பு என மொத்தம் மூன்று விருப்பங்களில் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 630 எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாமென வதந்திகள் தெரிவிக்கின்றன மேலும் இது ஓஸோ ஆடியோவை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 8 போன்றே நோக்கியா 7 ஸ்மார்ட்போனிலும் பொத்தீ அம்சம் இடம்பெறலாம்.


Click it and Unblock the Notifications