Subscribe to Gizbot

ஐபோன் 8 வடிவமைப்பு : ஒருபக்கம் குழப்பம், மறுபக்கம் அட்டகாசம்.!

Written By:

ஆப்பிள் நிறுவனத்தின் வரவிருக்கும் ஐபோன் 8 வடிவமைப்பு பற்றிய பல வகையான லீக்ஸ் மற்றும் கான்செப்ட் களை பார்த்தாகிவிட்ட நிலைப்பாட்டினுள் தற்போது ஐபோன் 8 சாதனத்தின் அதிர்ச்சியூட்டும் வடிவமைப்பு சார்ந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஆப்பிள் நிறுவனத்தின் 10-வது ஆண்டு விழாவில் வெளியாகும் ஐபோன் 8 சாதனத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்நோக்கும் ஐபோன் விரும்பிகளுக்கு, தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் விருந்தளிக்கும் வண்ணம் உள்ளது.

இதுவரை வெளியான ஐபோன் 8 கசிவுகள் மற்றும் கான்செப்ட் ஸ்மார்ட்போன் படங்களை மறந்துவிடுங்கள். ஒரு சில நாட்களுக்கு முன்பு ஃபோர்ப்ஸ் அறிக்கையானது சில புதிய ஐபோன் 8 புகைப்படங்களுடன் வெளியானது. அவைகள் கம்ப்யூட்டர் ஏய்டட் டிஸைன் ஸ்கீமட்டிக்ஸ்களை அடிப்படையாகக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கருவியின் அனைத்து கோணங்களையும்

கருவியின் அனைத்து கோணங்களையும்

நோடஸ் என்ற கேஸ் வடிவமைப்பாளர் மூலம் உருவாக்கம் பெற்றுள்ள அது வாடிக்கையாளர்களாகிய நமக்கு கருவியின் அனைத்து கோணங்களையும் காட்சிப்டுத்துகிறது. மேலேயும் இந்த அறிக்கையிலிருந்து நாங்கள் எவ்வகையான புதிய தகவல்களைப் பெற்றுள்ளோம் என்ற விவரங்கள் இதோ.

கைரேகை ஸ்கேனர் எங்கு இருக்கிறது.?

கைரேகை ஸ்கேனர் எங்கு இருக்கிறது.?

குறிப்பாக, வெளியாகியுள்ள படங்களில் உள்ள ஐபோன், ஒரு கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது போல் தெரியவில்லை. ஏற்கனவே, நிறுவனம் அண்டர்-ஸ்க்ரீன் கைரேகை ஸ்கேனரைப் பயன்படுத்துவதை கைவிட்டுவிட்ட நிலையில் இந்த ஐபோன் 8-ல், கோப்பர்டினோ-ஜெயண்ட், பயோமெட்ரிக் டச்-ஐடி ஆகியவைகளையும் கண்டறிய முடியவில்லை. ஆக இப்போது எழும் ஒரே கேள்வி - எங்கே கைரேகை ஸ்கேனர் வைக்கப்படும்.?

பெஸல்லெஸ் டிஸ்பிளே

பெஸல்லெஸ் டிஸ்பிளே

இந்த விடயத்தில் முந்தைய வதந்திகளுடன் இணக்கமாக இருக்கும் ஐபோன் 8 ஆனது கிட்டத்தட்ட 5.8 அங்குல முழுத்திரை ஓல்இடி டிஸ்ப்ளேவுடன், கிட்டத்தட்ட பெஸல்கள் இல்லாத கருவியாக இது காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாதனம் அதன் முன்னோடியுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு பெரியதாக இருக்குமென்றும் கூறப்படுகிறது.

வெர்டிக்கல் இரட்டை கேமராக்கள்

வெர்டிக்கல் இரட்டை கேமராக்கள்

கைரேகை ஸ்கேனர் இடம் தவிர, வரவிருக்கும் ஐபோன் 8 கேமரா சார்ந்த இடமளிப்பும் மிகவும் குழப்பமான விவகாரமாகவே இருக்கிறது. வெளியாகியுள்ள கருவியில் அதன் பின்புற பலகத்தில் ஒரு செங்குத்தாக அடுக்கப்பட்ட இரட்டை கேமரா அமைப்பு தெரிகிறது. மேலும் அறிக்கை கூறுவது நிஜமாகினால் (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள) இந்த ஸ்விட்ச் ஆக்மெண்டட் ரியாலிட்டிகானதாக இருக்கலாம். இதன் காரணமாக, ஏஆர் கேப்ட்ச்களுடன் பின்புற கேமிராக்கள் அறிமுகமாகும்.

பவர் பொத்தானிற்கு உள்ளே கைரேகை ஸ்கேனர்

பவர் பொத்தானிற்கு உள்ளே கைரேகை ஸ்கேனர்

இந்த புகைப்படங்கள், ஐஎஸ்ஓ 8 அசாதாரணமான பெரிய அளவிலான பவர் பொத்தானைக் கொண்டிருப்பதாக காண்பிக்கிறது. ஆக, ஆப்பிள் நிறுவனம் இதன் பெரிய பவர் பொத்தானிற்கு உள்ளே கைரேகை ஸ்கேனர் இணைத்துக்கொள்ளவும் ஒரு வாய்ப்பு உள்ளது. மேலும் வெளியான அறிக்கை அதை உறுதிசெய்யும் வண்ணம் இவ்வகை கைரேகை ஸ்கேனர் போன்ற ஒரு ஏற்பாட்டிற்கான ஆப்பிள் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இந்த ஐபோன் 8-ல் லைட்டிங் போர்ட் இருப்பதாகவும் ஆனால் அது ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் மூலம் வரப்போவதில்லை எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. வழக்கம்போல கருவியில் 3.5மிமீ ஆடியோ ஜாக் இல்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Alleged iPhone 8 final design revealed; power button may function as a fingerprint scanner. Read more about this in Tamil Gizbot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot