தி கிங் இஸ் பேக் : வெர்டிகல் டூயல் கேம் உடன் நோக்கியா 9.!?

|

நோக்கியா கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் இந்த காலாண்டில் நோக்கியா 9 என்ற அதன் தலைமை ஸ்மார்ட்போனை அறிவிக்க காத்திருக்கிறது. இந்த நோக்கியா 9 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது முக்கிய வலைத்தளங்களில் பல முறை தோன்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தி கிங் இஸ் பேக் என்ற வாசகத்திற்கு ஏற்றவண்ணம் ஹைஎண்ட் அம்சங்களை உள்ளடக்கி அவ்வப்போது லீக்ஸ் தகவலில் இடம்பெறும் நோக்கியா 9 சார்ந்த சமீபத்திய தகவல்லொன்று நோக்கியா பிரியர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. அதாவது சமீபத்தில் சீன வெளியீட்டின் ஐடி ஹோம் கசிவின் கீழ் நோக்கியா 9 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கேஸ்களின் படங்கள் வெளியாகியுள்ளது.

இரட்டை கேமரா அமைப்பு மற்றும்

இரட்டை கேமரா அமைப்பு மற்றும்

வெளியான நோக்கியா 9 கேஸ்களின் படங்கள் ஆனது வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் அம்சங்களைக் காட்டுகின்றன. முக்கியமாக அது பின்புறத்தில் உள்ள இரட்டை கேமரா அமைப்பு மற்றும் மற்றும் கட்டுப்பாட்டு பொத்தான்களின் அமைவிடம் மற்றும் போர்ட்களுக்கான நிலைப்பாடு.ஆகியவற்றை காட்சிப்படுத்துகிறது.

கேஸ்களின் வடிவமைப்பு

கேஸ்களின் வடிவமைப்பு

மேலும், வெளியான அறிக்கையில் நோக்கியா 9 கருவிக்கான வெவ்வேறு நிறங்களிலான கேஸ்களை காணமுடிகிறது. அதே சமயம் அந்த கேஸ்களின் வடிவமைப்பு ஒரு குறிப்பிட்ட சாதனத்திற்குச் சொந்தமானதாகவே தெரிகிறது.

இரட்டை கேமராவில் தெளிவு

இரட்டை கேமராவில் தெளிவு

நோக்கியா 9 கேஸ்கள் செங்குத்தான நிலையில் உள்ள கேமரா சென்சார்களை கொண்டுள்ளதால் இக்கருவியில் இரட்டை பின்புற கேமரா சென்சார் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இது நோக்கியா 9 குறித்து நாம் முன்பு பார்த்த கசிவை ஒட்டி செல்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

3.5 மிமீ ஆடியோ ஜாக்

3.5 மிமீ ஆடியோ ஜாக்

மேலும் கசிந்த கேஸ்களின் படங்களில் இருந்து நோக்கியா 9 அதன் வலது விளிம்பில் ஒரு பவர் பொத்தானையும் மற்றும் வால்யூம் கட்டுப்பாடு பொத்தான்களை கொண்டிருக்கிறது. மற்றும் ஸ்மார்ட்போனின் போன் பகுதியில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இடம்பெறுவது தெரிகிறது மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆனது சாதனத்தின் கீழே உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

நோக்கியா 9 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆனது நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் இருப்பது போன்றே இடையில் வருவதாகக் வெளியான புகைப்படங்கள் காட்சிப்படுத்துகிறது. கேஸ்களின் இடதுபுறத்தில் உள்ள கட்-அவுட் ஆனது ஸ்பீக்கர்களுக்கானதாக இருக்கலாம்.

5.3 அங்குல க்யூஎச்டி 1440பி டிஸ்ப்ளே

5.3 அங்குல க்யூஎச்டி 1440பி டிஸ்ப்ளே

இதற்கு முன்னர் வெளியான நோக்கியா 9 தலைமை ஸ்மார்ட்போன் பற்றிய அம்சங்களை பொறுத்தமட்டில் இக்கருவி கொரில்லா கிளாஸ் 5 உடனான 5.3 அங்குல க்யூஎச்டி 1440பி டிஸ்ப்ளே கொண்டு வருகின்றது என நம்பப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பட்டியல்

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பட்டியல்

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஓசி உடன் இணைக்கப்பெற்ற 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் கொண்டிருக்கலாம் மற்றும் உள்ளடக்க சேமிப்பை பொருத்தமட்டில்விரிவாக்க ஆதரவுடனான 64ஜிபி மெமரி கொண்டிருக்கலாம். மேலும் பின்புறத்தில் 13எம்பி சென்சார்கள் இடம்பெறும் என்றும் ப்ளூடூத் 4.2, என்எப்சி, ஜிபிஎஸ், வைஃபை மற்றும் ஐபி68 சான்றிதழ் ஆகியவைகளும் இக்கருவியின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பட்டியலில் அடங்கும்.

Best Mobiles in India

English summary
Alleged images of Nokia 9 cases leak showing vertical dual cameras. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X