Home
Mobile

இரண்டு டூயல் கேம் உடன் அட்டகாசமான அம்சங்களுடன் ஹுவாய் நோவா 3.!

இந்த ஸ்மார்ட்போன் 18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்பிளே அளவை கொண்டிருக்கும்.

By Muthuraj

நோவா தொடரின் அடுத்த தலைமுறை கருவிகள் மீது ஹூவாய் நிறுவனம் கவனம் செலுத்துவது போல தெரிகிறது. அதை நிரூபிக்கும் வண்ணம் நோவா 3 எனப் பெயரிடப்பட்ட ஸ்மார்ட்போனின் பல்வேறு கோணங்களிலான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

முதலில் ஐடி ஹோம் மூலம் காணப்பட்டுள்ள இந்த லீக்ஸ் புகைப்படங்களில் இருந்து வெளியாகப்போகும் ஹூவாய் நோவா 3 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் சில பிரதான அம்சங்கள் மீதான தெளிவை நம்மால் பெறமுடிகிறது.

பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு

பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு

வெளியான புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் உயரமான காட்சி ஆகியவற்றை காண முடிகிறது. இதன் அர்த்தம் இந்த ஸ்மார்ட்போன் 18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்பிளே அளவை கொண்டிருக்கும்.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

கருவியின் முன்னணி பேனலில் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா, இயர்பீஸ் மற்றும் ஒரு எல்இடி ப்ளாஷ் ஆகியவைகளை தெளிவாக காண முடிகிறது. பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் ஏதுமில்லை என்பதால் அதன் ஹோம் பொத்தானே ​​ஒரு கைரேகை சென்சார் செயல்பட முடியும்.

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

பின்புறத்தை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு இரட்டை கேமரா அமைப்பு காணப்படுகிறது. உடன் ஆன்டெனா பட்டைகள் மேல் மற்றும் கீழ் பலகத்தில் இயங்குகிறது. மேலும் ஒரு ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாகே அளவிலான மைக்ரோஃபோனையும் கொண்டுள்ளது.

5.60 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே

5.60 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே

அதே சமயம் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஒரு ஸ்பீக்கர் கிரில் ஆகியவைகளையும் உள்ளது. புகைப்படத்தில் முன் மற்றும் பின்புறத்தில் வளைவான விளிம்புகளையும் கவனிக்கலாம். முந்தைய லீக்ஸ் தகவலின்கீழ், சில முக்கிய குறிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யும் வகையில் ஹூவாய் நோவா 3 ஆனது ஒரு 5.60 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே (2160 x 1080 பிக்சல்கள் தீர்மானம்; 18: 9 விகிதம்) கொண்டிருக்கலாம். மேலும் இது புதிய கிரின் 670 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும்.

மொத்தம் நான்கு கேமராகள்

மொத்தம் நான்கு கேமராகள்

பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டிருக்கலாம். 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரேம் கொண்ட 3 ஜிபி என இரண்டு சேமிப்பு மாதிரிகளில் வெளிவரலாம். நோவா 2 மற்றும் நோவா 2ஐ போன்றே இக்கருவியும் மொத்தம் நான்கு கேமராக்களை கொண்டுவரலாம் என கூறப்படுகிறது.

3340எம்ஏஎச் பேட்டரி

3340எம்ஏஎச் பேட்டரி

அதாவது பின்புறத்தில் ஒரு 16 மெகாபிக்சல் மற்றும் 20 மெகாபிக்சல் என்ற இரட்டை கேமரா அமைப்பு மற்றும் முன்பக்கம் 20 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற இரட்டை கேமரா அமைப்பு விளையாடலாம். மேலும் இந்த பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 3340எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படலாம். இது அண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட இஎம்யூஐ கொண்டு இயங்கலாம்.

Best Mobiles in India

English summary
Alleged Huawei Nova 3 hands-on images leaked online. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X