Home
Mobile

லீக்ஸ் : குறைந்த பெஸல்கள் மற்றும் பின்புற டூயல் கேம் உடன் கூகிள் பிக்சல் 2.!

கூகுள் பிக்சல் 2 சாதனத்தில் எட்ஜ்-டூ-எட்ஜ் காட்சியை வெளிப்படுத்தியுள்ளது.

By Muthuraj

2017-ஆம் ஆண்டை மிக குறைவான பெஸல்கள் கொண்ட அல்லது பெஸல்கள் இல்லாத கருவிகளின் ஆதிக்கம் நிறைந்த ஆண்டு என்று கூறலாம். சாம்சங் நிறுவனத்தின் தலைமை சாதனங்களான கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் பின்னர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இசெட்17 ஆகிய சாதனங்கள் ஸ்மார்ட்போன்களில் பெஸல்களுக்கு இடமளிக்காத ஒரு பாணியை ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் மத்தியில் உருவாக்கி விட்டது.

லீக்ஸ் : குறைந்த பெஸல்கள், பின்புற டூயல் கேம் உடன்  கூகிள் பிக்சல் 2.!

இதன் விளைவாக பெஸல்கள் குறைவான பெரிய திரைகள் கொண்ட கருவிகள் சந்தையை ஆதிக்கம் செய்ய தொடங்கியுள்ளன. இதன் பாணிக்கு கூகுள் நிறுவனத்தின் பிக்சல் கருவிகளுக்கும் விதிவிலக்கல்ல. இந்த பெஸல்லெஸ் பாணியை பின்பற்றும் கூகுள் அதன் கூகுள் பிக்சல் 2 சாதனத்தில் இதை நிகழ்த்தும் என்பதை உறுதி செய்யும் புதிய படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த படத்தில் கிட்டத்தட்ட கருவியானது எட்ஜ்-டூ-எட்ஜ் காட்சியை வெளிப்படுத்தியுள்ளது.

படத்தின் சிறிய அளவு காரணமாக, சாதனத்தின் விவரங்கள் தெளிவாக காணப்படவில்லை. இருப்பினும், அது அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. வடிவமைப்பு அடிப்படையில், கூறப்படும் கூகுள் பிக்சல் 2 ஆனது பிக்சல் எக்ஸ்எல் கருவியை போலவே இருக்கிறது.

ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் வெளியிடப்பட்ட தகவலின் படி, இது பின்புறத்தில் அதே டூ-டோன்டு லுக்கை கொண்டுள்ளது. இது மெட்டல் பகுதிக்கு மேட் பூச்சும், மேல் பகுதியில் பிளாக் பூச்சும் கொண்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் மூலைகளிலும் சிறந்த கை பிடியை வழங்குவதற்காக சற்று வட்டமானதாக இருப்பதை நீங்கள் காணலாம்.

மற்றொரு முக்கிய அம்சத்திற்கு செல்கையில், சாதனத்தின் பின்புற பகுதியில் பகுதி இரட்டை கேமரா அமைப்பை காணமுடிகிறது. கிடைமட்ட கோணத்தில் உள்ள கேமரா உணரிகள் மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ளன. மற்றும் ஒருஎல்இடிபிளாஷ்தனையும் காண முடிகிறது.

கைரேகை ஸ்கேனரைப் போல் தோன்றும் ஒரு வட்ட வடிவமைப்பும் உள்ளது. இருப்பினும், முன்னர் குறிப்பிட்டபடி புகைப்படம் தெளிவானதாக இல்லை என்பதால் இதை உறுதி செய்ய இயலாது.அதுமட்டுமின்றி இது அதிகாரப்பூர்வமான புகைப்படம் அல்ல ஒரு கசிவு தான், எனவே அம்சங்கள் சார்ந்த எந்த முடிவுக்கும் வர முடியாது.

இருப்பினும் இந்த பிக்சல் 2 வடிவமைப்பு அசல் பிக்சல் தொலைபேசியை பறைசாற்றுவதால் (முக்கியமாக இரட்டை கேமரா அமைப்பு) கூகுள் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனில் வடிவமைப்பை மாற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது தெரிய வருகிறது. எவ்வாறாயினும், வரவிருக்கும் நாட்களில் கூகுள் பிக்சல் 2 தொடர்பான பல கசிவுகளை எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Alleged Google Pixel 2 render reveals minimal bezels and rear dual cameras. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X