10 நாள் பொறுங்க.. 6000mAh பேட்டரி, Nightography Mode கேமரா.. பக்கா பட்ஜெட்டில் புதிய Samsung 5G போன் வருது!
வகை வகையாக.. ரூ.10,000 முதல் ரூ.20000 க்குள் என்கிற பட்ஜெட்டில்.. வெவ்வேறு விலை பிரிவுகளின் கீழ் அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களை எல்லாம் பார்த்து.. "நீ படிச்சா ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா!" என்று கூறும்படியான ஒரு புதிய 5ஜி போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அது என்ன மாடல்? அது எப்போது அறிமுகமாகும்? அது என்ன விலைக்கு வரும்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இவ்வார தொடக்கத்தில் லைவ் ஆன ஒரு அமேசான் இந்தியா பேனர் ஆனது ஒரு புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை டீஸ் செய்தது. அந்த பேனரின்படி அமேசான் ப்ரைம் டே சேல் 2024 (Amazon Prime Day Sale 2024) விற்பனையின் ஒரு பகுதியாக இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

எப்போது அறிமுகமாகும்? டீஸர் பேனரை தொடர்ந்து, சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூலை 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது வெளிப்படுத்தபட்டுள்ளது. வெளியீட்டு தேதியோடு சேர்த்து சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களும் வெளிப்படுத்தபட்டுள்ளது
என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பை கொண்ட முதல் எம்-சீரிஸ் ஸ்மார்ட்போனாக வெளியாகும் என்பதை சாம்சங் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது இன்ஃபினிட்டி-ஓ (எச்ஐடி) எஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும்; அது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
மேலும் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் உலகளாவிய மாறுபாட்டை (க்ளோபல் வேரியண்ட்) போலவே, இந்திய வேரியண்ட்டிலும் 5 என்எம் எக்ஸினோஸ் 1380 சிப்செட் (5nm Exynos 1380 Chipset) கொண்டு இயங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வெப்பச் சிதறலுக்கான வேப்பர் கூலிங் சேம்பரும் இடம்பெறும்.
கேமராக்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெறும். இதுதவிர்த்து சாம்சங் நிறுவனம் பல கேமரா அம்சங்களையும் வெளிப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனில் குறைந்த வெளிச்சத்தில் போர்ட்ரெயிட் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவும் நைட்கிராஃபி மோட் இடம்பெறும். மேலும் இதன் கேமரா செட்டப்பில் ஆஸ்ட்ரோலாப்ஸ் அம்சமும் இருக்கும். இது பயனர்கள் இரவு நேர வானத்தின் டைம்-லேப்ஸ் வீடியோக்களை உருவாக்க அனுமதிக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற கேமரா சென்சார்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட, இதே ஸ்மார்ட்போனின் உலகளாவிய மாறுபாடு ஆனது 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டரை கொண்டு உள்ளது. இதையே நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.
க்ளோபல் வேரியண்ட்டில், முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது; இந்திய வேரியண்ட்டும் கூட இதே செல்பீ கேமராவை பேக் செய்யலாம். குறிப்பிடத்தக்க வகையில் இது சாம்சங் கேலக்ஸி எம்34 (Samsung Galaxy M34) ஸ்மார்ட்போனில் நாம் கண்ட அதே கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 25W வயர்டு சார்ஜிங் சொல்யூஷன் உடனான 6,000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும். கடைசியாக இது நாக்ஸ் பாதுகாப்பு தளம் (Knox security platform) மற்றும் அதன் நாக்ஸ் வால்ட் (Knox Vault) ஆகியவற்றையும் உள்ளடக்கும்
என்ன விலைக்கு வரும்? இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,990 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசல் வெளியீட்டு விலையானது, இந்த விலைக்கு சற்று கூடுதலாக இருக்கவும் வாய்ப்புள்ளது. உண்மையான விலை விவரம் ஜூலை 17 ஆம் தேதி தான் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications








