Home
Mobile

மறுபிறவி எடுத்த NOKIA.. ரூ.14,000 பட்ஜெட்டில்.. 5G ஆதரவுடன் HMD Crest, HMD Crest Max ஸ்மார்ட்போன்கள்!

நோக்கியா (NOKIA) பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது, அதன் சொந்த பிராண்ட்டிங்கின் கீழ், அதாவது நோக்கியா என்கிற லோகோவை (NOKIA Logo) தூக்கிவிட்டு எச்எம்டி என்கிற லோகோவுடன் (HMD Logo) தனது சொந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தொடங்கி பல நாட்கள் ஆகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் எச்எம்டி பல்ஸ் (HMD Pulse) மற்றும் எச்எம்டி பல்ஸ் ப்ரோ (HMD Pulse Pro) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருந்தது. ஆனால் அவைகள் எதுவும் இந்தியாவிற்கு வரவில்லை!

இதற்கிடையில் எச்எம்டி நிறுவனமானது ஜூலை 25 ஆம் தேதியன்று ஒரு புதிய ஸ்மார்ட்போன் சீரீஸை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதை உறுதி செய்துள்ளது. அது எச்எம்டி க்ரெஸ்ட் சீரிஸ் (HMD Crest Series Smartphones) ஆகும். இந்த சீரிஸின் கீழ் எச்எம்டி க்ரெஸ்ட் (HMD Crest) மற்றும் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் (HMD Crest Max) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் ஆகும். இவைகள் என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

மறுபிறவி எடுத்த NOKIA..  5G ஆதரவுடன் HMD Crest, HMD Crest Max!

என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இந்தியாவிற்கு வரும் எச்எம்டி நிறுவனத்தின் முதல் செல்ஃப் பிராண்டட் ஸ்மார்ட்போன்களான (First Self Branded Smartphones in India) எச்எம்டி க்ரெஸ்ட் மற்றும் க்ரெஸ்ட் மேக்ஸ் ஆகிய இரண்டுமே, அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அமேசான் இந்தியா (Amazon India) வலைதளம் வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமேசானில் உள்ள ஒரு பிரத்யேக மைக்ரோசைட் வழியாக இவ்விரு ஸ்மார்ட்போன்களை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

அதன்படி, இரண்டு க்ரெஸ்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே கிளாஸ் பேக் டிசைன் (Glass Back Design) உடன் வருகின்றன. அதாவது இவ்விரு மாடல்களுமே பிரீமியம் டிசைன் மற்றும் பில்ட்-ஐ (Premium Design and Build) கொண்டிருக்கும். மேலும் இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே எளிமையான செல்ஃப்-ரிப்பேர் செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன (Engineered for easy self-repair) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஸ்பிளே டிசைனை பொறுத்தவரை, இது குறுகிய பெசல்கள் உடனான சென்டர்-போசிஷன் செய்யப்பட்ட பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் வருகிறது; அதில் செல்பீ ஸ்னாப்பர் பேக் செய்யப்பட்டுள்ளது. சிப்செட் பற்றிய சரியான விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட, எச்எம்டி நிறுவனமானது, இந்த ஸ்மார்ட்போன்கள் "அதிவேகமான மற்றும் நிலையான செயல்திறனை" வழங்கும் என்று உறுதி அளித்துள்ளது.

எதிர்பார்க்கப்டும் அம்சங்களை பொறுத்தவரை, எச்எம்டி க்ரெஸ்ட் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), 8ஜிபி ரேம் மற்றும் யுனிசாக் டி760 5ஜி சிப்செட் (Unisoc T760 5G Chipset) உடன் வரலாம். எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் மாடலும் கூட பெரும்பாலும் இதே அம்சங்களை தான் பேக் செய்யும். அதிகபட்சம் சிப்செட் மற்றும் மெயின் கேமராவில் சில மாற்றங்களை கொண்டிருக்கலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால். எச்எம்டி க்ரெஸ்ட் மற்றும் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் ஆகியவை எச்எம்டி பல்ஸ் மற்றும் பல்ஸ் ப்ரோவின் ரீபேட்ஜ்டு வெர்ஷன்களாக இருக்காது. மாறாக இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே புத்தம் புதிய வடிவமைப்பு மற்றும் 5ஜி நெட்வொர்க் ஆதரவுடன் வரும் புதிய மாடல்களாக இருக்கும். கூடவே பல்ஸ் சீரிஸில் உள்ள கேமராக்களை விட ஒப்பீட்டளவில் மேம்படுத்தப்பட்ட கேமராக்களையும் கொண்டிருக்கும்.

என்ன விலைக்கு வரும்? எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் சுமார் ரூ.14,999 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். அமேசான் மைக்ரோசைட்டின் படி, எச்எம்டி க்ரெஸ்ட் மற்றும் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் ஆகிய இரண்டுமே 'மேட் இன் இந்தியா' ஸ்மார்ட்போன்கள் ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
All You Need to Know About HMD Crest and Crest Max Smartphones Ahead India Launch on July 25
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X