நோக்கியாவின் "ரூட்டை" பிடிக்கும் ஆப்பிள் நிறுவனம்.? அதென்ன.?

அடுத்த 2018-ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ்-ன் வடிவமைப்பு மொழியுடன் மொத்தம் மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

|

ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை ஐபோன்கள் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட போதிலும், ஐபோன் எக்ஸ் மற்றும் அடுத்தகட்ட ஐபோன்கள் (2018) பற்றிய பேச்சு மட்டும் ஓயவில்லை.

நோக்கியாவின்

அடுத்த தலைமுறை ஐபோன்கள் பற்றிய முணுமுணுப்புகள் ஏற்கனவே பெருவாரியான அளவில் வெளியாகி கொண்டிருக்க, கடந்த நவம்பர் மாத நடுப்பகுதியில், வெளியான ஒரு அறிக்கையின்கீழ் - அடுத்த 2018-ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ்-ன் வடிவமைப்பு மொழியுடன் மொத்தம் மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறியவந்தது.

பிரதான விற்பனை புள்ளி

பிரதான விற்பனை புள்ளி

தற்போது வெளியாகியுள்ள புதிய அறிக்கையானது, ஆப்பிள் நிறுவனம் நோக்கியாவின் "பிரதான விற்பனை புள்ளி"யொன்றை கைப்பற்றுமென அறிவித்துள்ளது. அதாவது 2018-ல் வெளியாகும் ஐபோன்களின் பேட்டரிதிறன் மிகவும் மேம்படுத்தப்படும் என்று கூறியது மட்டுமின்றி அதன் பேட்டரி அளவுகள் சார்ந்த விவரங்களையும் பகிர்ந்துள்ளது.

மேம்பாடுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்

மேம்பாடுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்

இந்த தகவலை, ஆப்பிள் ஐபோன்கள் பற்றிய துல்லியமான கணிப்புகளை நிகழ்த்தும் கேஜிஐ ஆய்வாளரான மிங்-சி கோவ்மு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து அடுத்த ஆண்டு வெளியாகும் ஐபோன்களில் பெரிய அளவிலான பேட்டரி மேம்பாடுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

எல்-வடிவ பேட்டரி வடிவமைப்பு

எல்-வடிவ பேட்டரி வடிவமைப்பு

ஆய்வாளர் கோவ் கருத்தின்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் 6.5 இன்ச் மற்றும் அடுத்த ஆண்டு வெளியிடும் 5.8 அங்குல ஓல்இடி ஐபோன்களில் எல்-வடிவ பேட்டரி வடிவமைப்புகளை பெறும். இவ்வழியாக ஆப்பிள் ஐபோன்களின் பேட்டரி தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும் மற்றும் நிச்சயமாக ஆப்பிள் ஐபோன்களின் பேட்டரி ஆயுளும் அதிகரிக்கும்.

2900 எம்ஏஏச் முதல் 3000 எம்ஏஏச்

2900 எம்ஏஏச் முதல் 3000 எம்ஏஏச்

விரிவாக வெளியான தகவலின் கீழ், கூறப்படும் 5.9 அங்குல ஐபோன் ஆனது 2900 எம்ஏஏச் முதல் 3000 எம்ஏஏச் அளவிலான பேட்டரி திறனை பெறலாம். தற்போதைய தலைமுறை கருவியான ஐபோன் எக்ஸ் ஒரு 2716எம்ஏஏச் பேட்டரி திறன் கொண்டுள்ளது. ஆக இதன் திறமையுடன் ஒப்பிட்டால் சுமார் 10 சதவீதம் அதிக பேட்டரியுடன் 2018 ஐபோன் வெளியாகும்.

கூடுதலாக 1 முதல் 2 மணி நேரம் வரையிலான பேட்டரி

கூடுதலாக 1 முதல் 2 மணி நேரம் வரையிலான பேட்டரி

உண்மையான ஐபோன் பயன்பாடு அடிப்படையின்கீழ் பார்த்தால், ஒரு 10 சதவீத பேட்டரித்திறன் அதிகரிப்பானது, கூடுதலாக 1 முதல் 2 மணி நேரம் வரையிலான பேட்டரி ஆயுளை வழங்கும். இந்த தகவலின் வழியாக, ஆப்பிள் நிறுவனம் அதன் முதிர்வு மற்றும் பரந்த ஏற்றுக்கொள்ளல் ஆகியவைகளை வெளிப்படுத்தும் என்பதையும் எதிர்பார்க்கமுடிகிறது.

6.1 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட மாறுபாடு

6.1 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட மாறுபாடு

வெளியாகும் ஐபோன்களை பொறுத்தமட்டில், ஐபோனின் 5.8 அங்குல மற்றும் 6.5 அங்குல வகைகளை தவிர, மூன்றாவதாக 6.1 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட மாறுபாடு ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. இது ஒரு எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது என்பதால், அது பெரும்பாலும் உலோகத் பின்புறம் மற்றும் வயர்லெஸ் சார்ஜ் ஆதரவுடன் வரக்கூடும்.

செவ்வக வடிவ மொழி

செவ்வக வடிவ மொழி

ஆய்வாளர் கோவ் கூற்றுப்படி மற்ற இரண்டு ஓல்இடி டிஸ்பிளே கொண்ட ஐபோன்களுடன் ஒப்பிடுகையில், மூன்றாவது மாறுபாடானது மலிவான விலைக்கு அறிமுகமாகலாம். உடன் 6.1 அங்குல ஐபோன் ஆனது செவ்வக வடிவ மொழியை பின்தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே போல் ஒட்டுமொத்த பேட்டரி திறனையும் அதிகரிக்கும்

வெறும் சாத்தியக்கூறுகளாக எடுத்துக்கொள்ளவும்

வெறும் சாத்தியக்கூறுகளாக எடுத்துக்கொள்ளவும்

இவை அனைத்துமே ஆய்வாளரின் ஊகங்கள் என்பதும், எதுவுமே ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆப்பிள் ஐபோன் தொடர்பான சில சுவாரஸ்யமான லீக்ஸ் தகவலாக இது கருதப்பட்டாலும் கூட, இந்த கணிப்புகளை வெறும் சாத்தியக்கூறுகளாக எடுத்துக்கொள்ளும்படி நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

Best Mobiles in India

English summary
All three Apple iPhones releasing in 2018 will have increased battery capacity: KGI analyst Ming-Chi Kuo. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X