Home
Mobile

UPI வசதி, யூட்யூப், ஸ்நேக் கேம், 32GB மெமரி.. NOKIA 3210 மீண்டும் அறிமுகம்.. ஆளுக்கு 2 வாங்கும் விலை!

நோக்கியா (NOKIA) பிராண்டட் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பீச்சர் போன்களை (Feature Phones) தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது தனது சொந்த பிராண்டிங்கின் கீழ் எச்எம்டி ஸ்மார்ட்போன்களை (HMD Smartphones) அறிமுகம் செய்ய தொடங்கியதன் விளைவாக.. அவ்வளவு தான் இனிமேல் நோக்கியா பிராண்டிங்கின் கீழ் எந்த போன்களும் வராது.. நோக்கியாவின் கதை முடிந்தது என்கிற பேச்சுக்கள் அடிபட தொடங்கின. அதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியாக எச்எம்டி நிறுவனம் ஒரு வேலையை பார்த்துள்ளது.

அப்படி என்ன செய்துள்ளது? எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது நோக்கியா நிறுவனத்தின் மிகவும் ஐகானிக் மொபைல்களில் (Iconic Mobile) ஒன்றான நோக்கியா 3210 (NOKIA 3210) மாடலை 'அப்டேட்' செய்து, அதை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுகமானது, நோக்கியா 3210 மொபைலின் அசல் வெளியீட்டின் 25 வது ஆண்டு நிறைவை (25th anniversary of the original Nokia 3210) குறிக்கிறது.

NOKIA 3210 மீண்டும் அறிமுகம்.. ஆளுக்கு 2 வாங்கும் விலை!

புதிய நோக்கியா 3210 மாடலில் அப்படி என்ன ஸ்பெஷல்? 3 கலர் ஆப்ஷன்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 3210 பீச்சர் போன் ஆனது யூட்யூப் அணுகல், 1450mAh பேட்டரி, 2 மெகாபிக்சல் கேமரா, யுனிசாக் டி107 சிப்செட், எப்எம் ஸ்ட்ரீமிங் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும் இந்த புதிய நோக்கியா 3210 மொபைல் போன் ஆனது என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமான அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவால் (National Payments Corporation of India) அங்கீகரிக்கப்பட்ட ப்ரீ-இன்ஸ்டால்டு யுபிஐ ஆப்பையும் (UPI App) கொண்டு உள்ளது.

NOKIA 3210 மீண்டும் அறிமுகம்.. ஆளுக்கு 2 வாங்கும் விலை!

நோக்கியா 3210 மொபைல் போன் வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? டூயல் சிம் (Dual SIM) ஆதரவுடன் வரும் நோக்கியா 3210 ஆனது எஸ்30பிளஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் (S30+ Operating System) கீழ் இயங்குகிறது. இது 2.4 இன்ச் அளவிலான க்யூவிஜிஏ டிஸ்பிளேவை (QVGA Display) கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி இது யுனிசாக் டி107 எஸ்ஓசி (Unisoc T107 SoC) மூலம் இயக்கப்படுகிறது

ரேம் மற்றும் இன்டர்னல் ஸ்டோரேஜை (RAM and Internal Storage) பொறுத்தவரை புதிய நோக்கியா 3210 மாடலில் 128எம்பி ரேம் மற்றும் 64எம்பி ஸ்டோரேஜ் உள்ளது. மேலும் இதன் ஸ்டோரேஜை பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (Micro SD Card Slot) மூலம் 32ஜிபி வரை விரிவாக்கவும் முடியும்.

NOKIA 3210 மீண்டும் அறிமுகம்.. ஆளுக்கு 2 வாங்கும் விலை!

கேமராவை பொறுத்தவரை, இது ரியர் எல்இடி ப்ளாஷ் (Rear LED Flash) உடனான 2 மெகாபிக்சல் ரியர் கேமரா சென்சாரை கொண்டுள்ளது. சுவாரசியமாக இந்த போனில் நோக்கியாவின் கிளாசிக் ஸ்னேக் கேமும் (Classic Snake Game) உள்ளது மற்றும் யூட்யூப் (YouTube) மற்றும் யூட்யூப் ம்யூசிக்கிற்கான (YouTube Music) அணுகலையும் வழங்குகிறது.

யுபிஐ மற்றும் யூட்யூப் ஆப்களை தவிர்த்து வானிலை (Weather), செய்திகள் (News), சோகோபன் (Sokoban), கிரிக்கெட் ஸ்கோர் (Cricket Score), 2048 கேம் (2048 Game) மற்றும் டெட்ரிஸ் (Tetris) உள்ளிட்ட எட்டு ஆப்களையும் கூட புதிய நோக்கியா 3210 மாடல் ஆதரிக்கிறது.

NOKIA 3210 மீண்டும் அறிமுகம்.. ஆளுக்கு 2 வாங்கும் விலை!

கனெக்டிவிட்டியை பொறுத்தவரை இது ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) உடன் வருகிறது. மேலும் இது வயர்டு மற்றும் வயர்லெஸ் மோட்-ன் கீழ் எப்எம் ரேடியோ (FM radio with wired and wireless mode) மற்றும் எம்பி3 பிளேயரையும் (MP3 Player) கொண்டுள்ளது. இது 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கையும் (Headphone Jack), கூடவே யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட்டையும் கொண்டும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை புதிய நோக்கியா 3210 மாடலானது 1450mAh பேட்டரியை பேக் செய்கிறது. நோக்கியா நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 4ஜி நெட்வொர்க்கில் 9.8 மணிநேர டால்க் டைமை (Talk Time) வழங்கும். கடைசியாக இந்த பீச்சர் போன் அளவீட்டில் 122x52x13.14மிமீ உள்ளது.

புதிய நோக்கியா 3210 மாடலின் விலை நிர்ணயம் என்ன? இந்தியாவில் இது ரூ.3,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கிரன்ஞ் பிளாக் (Grunge Black), ஸ்கூபா ப்ளூ (Scuba Blue) மற்றும் ஒய்2கே கோல்ட் (Y2K Gold) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் நோக்கியா 3210 மாடலை நோக்கியா இந்தியா இணையதளம் (Nokia India Website), அமேசான் (Amazon) மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக வாங்கலாம்!

Best Mobiles in India

English summary
All New NOKIA 3210 With UPI YouTube Snake Game Relaunched in India For Rs 3999 Check Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X